இந்திய கிரிக்கெட்

குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் விராட் ரோகித்தான்.. பின்னணி காரணம் இதுதான் – இர்பான் பதான் பேட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலைடு மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாவது இட சிக்கல்

இந்திய அணியின் பேட்டிங் வரிசை எட்டாவது இடம் வரையில் இருக்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் குல்தீப் யாதவ் இடம் எப்பொழுதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தற்பொழுது ஆறு, ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் அக்சர் படேல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் விளையாடுகிறார்கள்.

இதன் காரணமாக உலகத் தரமான ஸ்பின்னர் குல்தீப் யாதவ் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாளைய போட்டியில் அவரை கட்டாயம் விளையாட வைக்க வேண்டும் அதற்கு யாரை நீக்க வேண்டும் என்பது குறித்து இர்பான் பதான் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இவரை நீக்குங்கள்

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “குல்தீப் யாதவை எப்படி அணியில் சேர்க்க முடியும்? அதற்கு மூன்று வழிகள் என்னிடம் இருக்கிறது. முதலாவதாக அவரை வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக கொண்டு வரலாம். இல்லையென்றால் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு கொண்டு வரலாம். இப்படி செய்தால் அவர்களுடைய பேட்டிங் வரிசை 8 வரையில் வாஷிங்டன் சுந்தருடன் இருக்கும். எப்படியோ அவரை விளையாட வைக்க வேண்டும்”

இதையும் படிங்க: கில்லை சாதாரணமா நினைக்கிறீங்க.. ஆனா அவர் என்னை மாதிரி.. நேர்ல பார்த்தேன் – ரிக்கி பாண்டிங் பாராட்டு

“குல்தீப் யாதவ் ஒரு தாக்குதல் பந்து வீச்சாளர் என்பதால் நான் அவரை விரும்புகிறேன். முதல் போட்டியில் ஸ்பின்னர்கள் விக்கெட் கைப்பற்றியதை நாம் பார்த்தோம். எனவே அங்கு ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்த முடியாது என்று கிடையாது. மேலும் சில மாதங்கள் கழித்து பெரிதாக கிரிக்கெட் விளையாடாமல் ரோகித் மற்றும் விராட் வந்திருக்கிறார்கள். எனவேதான் ஏழு வரையில் பேட்டிங்கை வைத்துக் கொண்டு குல்தீப்பை விளையாட வைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by