ரோகித் கோலி சூர்யா.. இந்திய அணியை ஊனப்படுத்தறாங்க.. ஆஸி இங்கிலாந்து இப்படி இல்லை – இர்பான் பதான் பேச்சு

0
114
Irfan

இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தை அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க்கும் மைதானத்தில் ஜூன் 5ஆம் தேதி விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு உருவாக்கும் பலவீனத்தைப் பற்றி இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை வெளிவட்டத்தில் நான்கு பீல்டர்கள் மட்டுமே நிற்க அனுமதி உண்டு. இதன் காரணமாக பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவது கடினமாக மாறிவிட்டது. பேட்ஸ்மேன் மிக எளிதாக அவர்களது பந்துவீச்சில் பவுண்டர்கள் விளையாடி விடுவார்கள் என்பதால் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் பயன்படுத்துவது குறைந்து விட்டது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே முடிந்து ஏழாவது ஓவரில் இருந்து வெளிவட்டத்தில் 5 பீல்டர்கள் நிற்க அனுமதி கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் பகுதி நேர பந்துவீச்சாளர்களுக்கு அணியில் தேவை இருக்கிறது. ஓரளவுக்கு சிறப்பாக வீசக்கூடிய பகுதி நேர பந்துவீச்சாளர் இருந்தால், அவரை வைத்துக் கொண்டு அணியில் ஒரு கூடுதல் பேட்மேனை சேர்க்க முடியும்.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது ” பேட்டிங் நீளத்தை அதிகரிப்பதற்காக இரண்டு விதமான காம்பினேஷனை முயற்சி செய்யலாம். அக்சர் படேலை மூன்றாவது சுழல் பந்துவீச்சாளராக கொண்டு வரலாம். இல்லையென்றால் சிவம் துபேவை கொண்டு வரலாம். அதே ஜெய்ஸ்வால் விளையாடினால் அவரால் ஒன்று இரண்டு ஓவர்கள் பந்து வீச முடியும். ஏனென்றால் அவர் தொடர்ந்து வலைகளில் பந்து வீசி வருவதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் ஓனர்கள் இந்த மாதிரி பிளேயர்களதான் நல்லா கவனிப்பாங்க.. இந்தியாவை விட ஆஸி பெட்டர் – ஹென்றி கிளாசன் பேட்டி

- Advertisement -

ஹர்திக் பாண்டியா மூன்று நான்கு ஓவர்கள் வீசுவதாக இருந்தால் இந்திய அணிக்கு பிரச்சனைகள் தீர்ந்து விடும். அதே சமயத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோர் பந்து வீச முடியாதது இந்திய அணியை ஊனமாக்குகிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியில் பகுதி நேரம் பந்து வீச நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். இந்த பக்கம் இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் மொயின் அலி, வில் ஜேக்ஸ் மற்றும் லிவிங்ஸ்டன இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நாம் நிச்சயம் ஊனமுற்றவர்களாக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.