ஐபிஎல் ஓனர்கள் இந்த மாதிரி பிளேயர்களதான் நல்லா கவனிப்பாங்க.. இந்தியாவை விட ஆஸி பெட்டர் – ஹென்றி கிளாசன் பேட்டி

0
1286
Klaasen

இந்த வருடம் கடந்த மாதத்தில் நடந்த முடிந்த 17 வது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தோற்றது. இந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி பேட்ஸ்மேன் ஹென்றி கிளாசன் ஐபிஎல் தொடர் குறித்தும் இந்திய மைதானங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

ஐபிஎல் தொடருக்கான 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஹென்றி கிளாசன் 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன இவர் மிடில் வரிசையில் மிக அதிரடியாக எதிர்பார்க்காத வகையில் விளையாட கூடியவர்.

- Advertisement -

தற்போதைய டி20 கிரிக்கெட் லீக் யுகத்தில் இவருக்கான சந்தை மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. தற்பொழுது இவர் மீண்டும் ஏலத்திற்கு வந்தால் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை விட இன்னொரு மடங்கு ஐபிஎல் தொடரில் சேர்த்து வாங்க முடியும். 2023ஆம் ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 448 ரன்களும், இந்த வருடம் ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடினால் 479 ரன்களும் குவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அணி உரிமையாளர்கள் எப்படியான வீரர்களுக்கு அதிக கவனம் கொடுக்கிறார்கள்? இந்திய மைதானங்களில் சிக்ஸர்கள் அடிப்பது எப்படி இருக்கிறது? என்பது குறித்து அவர் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஹென்றி கிளாசன் கூறும் பொழுது “நான் சமீபத்தில் பாப் டு பிளேசிஸ் இடம் அவர் எப்படி ஐபிஎல் தொடரில் சீரானவராக ரன்கள் குவித்து வருகிறார் என்பது குறித்து கேட்டேன். அப்பொழுது எனக்கு பதில் கூறிய அவர் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் சிக்ஸர்கள் அடிக்கும் மற்றும் கேம்களை வென்று தரும் பேட்ஸ்மேன்களை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள் என்று கூறினார். எனவே நான் என்னுடைய பேட் ஸ்விங் நன்றாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து அதற்காக பயிற்சி செய்கிறேன். முதல் பந்தில் இருந்து சிக்ஸர்கள் அடிப்பதற்காக முயற்சி செய்கிறேன்.

இதையும் படிங்க : எங்க பாகிஸ்தான் டீம் சர்வதேச டீம் மாதிரி இல்ல.. நான் ஓவல்ல அந்த உண்மையை பார்த்தேன் – பாக் முன்னாள் வீரர் யாசிர் அராபத் பேட்டி

இந்த நாட்களில் பெரிய மைதானங்கள் இல்லை. விதிவிலக்காக ஆஸ்திரேலியாவில் பெரிய மைதானங்கள் இருக்கிறது. இங்கிலாந்திலும் ஓரளவுக்கு டீசன்டாக இருக்கிறது. அதே சமயத்தில் இந்தியாவில் மைதானத்தின் அளவு மிகவும் சிறியதாக இருக்கிறது. அங்கு சிக்ஸர்கள் அளவு 65 மீட்டர் முதல் 75 மீட்டர்களுக்குள் இருக்கிறது. எனவே இந்தியாவில் சிக்ஸர் அடிப்பது எளிமையான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -