கேரி கிரிஸ்டன் பாவம் சிக்கிட்டாரு.. இந்தியா மாதிரி பாகிஸ்தான் டீம் கிடையாது – இர்பான் பதான் பேச்சு

0
217
Irfan

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட்டை வெகுவாக பாதித்தது. இதன் காரணமாக பிரச்சனைகளை முடிக்க புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்தது. தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட படுதோல்வி, குறிப்பாக அவர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும், கிரிக்கெட் வாரிய அமைப்பிலும் பெரிய அதிர்ச்சியையும் மாற்றங்களையும் கொண்டு வந்தது.

- Advertisement -

இந்த தோல்வி காரணமாக பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பல பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மாற்றப்பட்டார்கள். இந்த நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஷேன் வாட்சன் போன்ற பெரிய வீரர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த நிலையில் இறுதியாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பொழுது இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்தது. மேலும் அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் பிளவு மற்றும் அரசியல் காரணமாக அங்கு பயிற்சியாளராக இருப்பது சாதாரண விஷயம் இல்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது பாகிஸ்தான அணி அமெரிக்க அணியிடம் தோல்வியும் அடைந்திருக்கிறது.

இது குறித்து இர்பான் பதான் கூறும் பொழுது “இது பாகிஸ்தான் கிரிக்கெட். கேரி கிரிஸ்டன் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பயிற்சி அளிப்பதில் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்வார். பாகிஸ்தான் அணியுடன் அவர் பயிற்சி காலத்தில் இது போன்ற பிரச்சினைகளை நிறைய சந்திப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : டீம்ல 11 பேர் இருக்காங்க.. இந்த விஷயத்துக்கு என்னை மட்டும் குறி வச்சு ஏன் தாக்கறிங்க – டேவிட் வார்னர் கோபம்

கேரி கிரிஸ்டன் குறித்து நான் பரிதாபப்படுகிறேன். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பொழுது அவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தார். மேலும் அவர் முன்னேற விரும்பாத பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி பயிற்சியாளராக இருக்கிறார். இது அவருக்கு வேதனை தருவதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.