தற்போது உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் முகமது நவாஸ் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியது குறித்து இந்திய உதவி பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கெட் பதிலளித்திருக்கிறார்.
இன்று ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. பொதுவாக இந்த இரண்டு நாடுகளும் உலகில் எந்த பகுதியில் மோதிக்கொண்டாலும் உலகெங்கும் இந்த போட்டிக்கு எதிர் பார்த்து இருக்கும். தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தான் பயிற்சியாளர் கருத்து
தற்போது பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் ஆர் சி பி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலம் குறித்து பேசும் பொழுது ஒரு சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தியது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
அவர் தங்கள் அணியில் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பது மிகவும் அழகான விஷயம் எனவும், அதில் முகமது நவாஸ் தற்போது உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளராக இருப்பதாகவும், அவர் அணிக்கு திரும்பிய கடந்த ஆறு மாதத்தில் மிகச் சிறந்த முறையில் மாறிவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்திய பயிற்சியாளர் பதில்
இது குறித்து இந்திய பயிற்சியாளர் பதிலளிக்கும் போது ” இந்த போட்டியில் சுழல் பங்குவீச்சாளர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த சுழல் பந்துவீச்சுக்கு முன்பு கிடைத்த சாதகம் போல் தற்போது இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சு மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது”
இதையும் படிங்க : பவுலர் தலையெழுத்தை எழுத கம்பீர் யார்?.. அர்ஷ்தீப் சிங் கோபப்பட வேண்டும்.. இதை விடக்கூடாது – அஸ்வின் கருத்து
“மேலும் இரு அணிக்கும் சுழல் பந்து வீச்சு விருப்பங்கள் நிறைய இருக்கின்றன. அதேபோல ஒவ்வொருவரும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை விருப்பப்படி தரவரிசைப்படுத்தி அறிவித்துக் கொள்ளலாம். அதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அதை நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பது வேறு” என்று கூறியிருக்கிறார்.






