நான் வெஸ்ட் இண்டீஸ் டீம்ல இருந்திருந்தா.. இந்த பிளேயர திட்டியே இருப்பேன் – இர்பான் பதான் விமர்சனம்

0
143
Irfan

நேற்று டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் சிறிய அணியான பப்புவா நியூ கினியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கும். கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தப்பித்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் அந்த அணியின் ஒரு முக்கிய வீரர் குறித்து இர்பான் பதான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசியது. பப்புவா நியூ கினியா அன்னிக்கு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த சேசே பாப் 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி விடும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 50 ரன்கள் தாண்டி இருந்த வெஸ்ட் இண்டீஸ் நிக்கோலஸ் ஸ்டூடண்ட் விக்கெட்டை இழந்ததும் அங்கிருந்து தடுமாற ஆரம்பித்தது.

இதற்கு அடுத்து தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து மோசமான ஒரு ஷாட் ஆடி ஆட்டம் இழந்தார். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் கடைசி நான்கு ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் இருவரும் அதிரடியாக ஆடி ஒரு ஓவர் மீதும் வைத்து வெற்றி பெற வைத்தார்கள்.

இந்த அளவில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் மீது விமர்சனம் செய்து பேசிய இர்ஃபான் பதான் “பிராண்டன் கிங் எப்போதும் இல்லாத ஒரு மோசமான ஷாட்டை விளையாடினார். அவர் ரிஸ்க் எடுத்து விளையாடி போட்டியை வென்றிருக்கலாம். நான் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இருந்திருந்தால் அவரை திட்டி இருப்பேன். அப்படியான நேரத்தில் அப்படி ஒரு மோசமான ஷாட்டை விளையாடவே கூடாது.

- Advertisement -

இதையும் படிங்க : இத செய்யலனா கோலிய வெளியே உட்கார வைப்பேன்.. ஜாம்பா போதும் உங்களுக்கு – மேத்யூ ஹைடன் பேட்டி

பப்புவா நியூ கினியா அணி கடைசி கட்ட ஓவர்களில் தங்களுடைய பதட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், அவர்களால் மிகப்பெரிய அப்செட்டை செய்திருக்க முடியும். அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தினால் தோல்வி அடைந்து விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.