இந்தியா முதல் மேட்ச் இப்படியான அணியோடுதான் விளையாட வேண்டும் ; இர்பான் பதான் வெளியிட்டுள்ள பிளேயிங் லெவன்!

0
89
Ind vs Pak

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி வந்தது, இந்த தோல்வி இந்திய கிரிக்கெட்டிற்கு பெரிய நெருக்கடிகளை உருவாக்கி இருந்தது. அந்த நெருக்கடி இன்னும் விரிவடைந்து, வருகின்ற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கின்ற உலகக்கோப்பை போட்டிக்குத் தொடர்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஆவது எட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

திங்கட்கிழமை மாலை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்தது. பெரிய அளவில் எந்த வித சர்ச்சைகளும் இல்லாத அளவில் இந்த அணி இருந்தது. ஒரே ஒரு விமர்சனமாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது பல மட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

- Advertisement -

வருகின்ற டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி: கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஆர் அஸ்வின் யுஸ்வேந்திர சாகல், ஜஸ்பிரித் பும்ரா புவனேஸ்வர் குமார் ஹர்ஷல் படேல், அர்ஸ்தீப் சிங். இதில் ரிசர்வ் வீரர்களாக முகமது சமி, ஸ்ரேயாஸ், ரவி பிஷ்னோய், தீபக் சஹர் ஆகிய நான்கு வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியைச் சந்தித்து தோல்வியைத் தழுவியது இந்திய அணி. இதனால் இந்த முதல் போட்டிக்கு இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் தாண்டி உலக அளவில் பெரிய முக்கியத்துவம் எழுந்திருக்கிறது.

தற்போது பாகிஸ்தான் அணியுடன் உலக கோப்பையில் ஆட இருக்கும் முதல் போட்டியின் முக்கியத்துவம் உணர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் ஒரு பிளேயிங் லெவனை தந்திருக்கிறார். அவரது பிளேயிங் லெவன்த் கீழே.

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாகல், ஜஸ்பிரித் பும்ரா புவனேஸ்வர் குமார் ஹர்ஷல் படேல்.

இதுகுறித்து அவர் பேசும்பொழுது “பாருங்கள் நீங்கள் முதல் ஆட்டத்தில் ஒரு பெரிய தொடரில் விளையாடுகிறிர்கள் என்றால் உங்களிடம் ஒரு தரமான சுழற்பந்துவீச்சாளரோடு, 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும். சுழற்பந்து வீச்சு இடத்தில் இடத்தில் சாகல், வேகப்பந்து வீச்சில் பும்ரா, புவி, ஹர்சல் ஆகியோர் இருப்பார்கள். பேட்டிங்கில் ரோகித், கேஎல் ராகுல், விராட்கோலி, சூரியகுமார், ஹர்த்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருப்பார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியவர் ” இது ஒரு நல்ல கலவையான அணியாக இருக்கும். இதில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். அவர்களில் இருவர் இறுதி கட்ட ஓவர்களில் மிகச்சிறப்பாக வீசக் கூடியவர்கள். இந்த அணியில் யார் ஸ்பின்னர் என்பதில் எந்த குழப்பமும் கிடையாது. எடுக்கப்படும் அணியில் எல்லா விதமான அம்சங்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த அணிக்குள் தேவைப்பட்டால் அர்ஸ்தீப் வரலாம். அவரும் இறுதி கட்ட ஓவர்களில் நன்றாகவே வீசுவார்” என்று கூறியிருக்கிறார்.