284 ரன்.. அயர்லாந்து கேப்டன் அசத்தல் பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா தோல்வி.. முடிவுக்கு வந்தது தொடர்

0
2613
Ireland

தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது.

இந்த இரண்டு அணிகளும் அபுதாபியில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. முதல் இரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்க தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. அதே சமயத்தில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒரு போட்டியை வென்று சமன் செய்தனர்.

- Advertisement -

அயர்லாந்து கேப்டன் அசத்தல் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பால்பிரின் 73 பந்துகளில் 45 ரன்கள். கேப்டன் பால் ஸ்டெர்லிங் 92 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் எடுத்தார்கள்.

இதைத் தொடர்ந்து ஹாரி டெக்டர் 48 பந்துகளில் 60 ரன்கள், கர்டிஸ் கேம்பர் 36 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசார்ட் வில்லியம்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

போராடிய தென் ஆப்பிரிக்க ஸ்மித்

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 126 ரன்கள் எடுத்திருந்த பொழுது முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதைத்தொடர்ந்து இளம் வீரர் ஜேசன் ஸ்மித் ஒரு முனையில் தனித்து போராடி 93 பந்துகள் விளையாடி 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : 2025 ஐபிஎல் மெகா ஏலம்.. இத செய்யற டீம்தான் பைனல் போகும் கப் ஜெயிக்கும் – அஸ்வின் கணிப்பு

இத்துடன் தென் ஆப்பிரிக்காவில் வெற்றி வாய்ப்பும் முடிவுக்கு வந்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 46.1 ஓவரில் 215 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் கிரகாம் ஹூம் மற்றும் கிரேஜ் யங் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -