IRE vs AFG: 111 ரன்கள்.. அயர்லாந்து அபார வெற்றி.. டி20ல் ஆப்கன் அணி ஏமாற்றம்

0
100

துபாயில் நடைபெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அயர்லாந்து அணி சிறப்பாக வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியை ஆச்சரியப்படுத்தியது.

துபாயில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. இதன்படி பேட்டிங் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு 38 ரன்களில் தொடக்க ஜோடி பிரிந்தது. பால் பிரின் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் கேப்டன் பால் ஸ்டிரிங் 25 ரின்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பின்னர் விக்கெட் சரிவினை தடுத்து நிறுத்திய டெக்டார் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் ஏழு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 54 ரன்கள் விளாசினார். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான் அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இது எளிதில் வெற்றி பெறும் இலக்கு போலத்தான் தெரிந்தது.ஆனால் தொடக்கத்திலேயே ஆப்கானிஸ்தானின் சரிவு ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி நட்சத்திர ஆட்டக்காரர் குர்பாஸ் தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பின்னர் அட்டார் ஒரு ரன்களிலும், இப்ராகிம் ஜர்தான் 11 ரன்களிலும் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த முகமது இஸ்தாக் மற்றும் முகமது நபி ஆகியோர் விக்கெட் சரிவினைத் தடுத்து நிறுத்தி ரன் கணக்கை உயர்த்த போராடினர்.

முகமது இஸ்தாக் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். முகமது நபியும் 25 ரன்கள் ஆட்டம் இழக்க, பின்னால் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ஆப்கானிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இப்படி குறைந்த ரன்களிலேயே ஆப்கானிஸ்தான் அணி ஆல் அவுட் ஆகும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இதற்குக் காரணம் அயர்லாந்து அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சு. அயர்லாந்து அணியின் பென் ஒயிட் மிகச் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளினார். மற்றொரு பந்துவீச்சாளரான ஜோஸ்வா லிட்டில் நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சிறப்பாக பந்து வீசிய பென் வொயிட் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது அயர்லாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -