195 ரன்.. அயர்லாந்து வீரர் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்கா தோல்வி.. தொடரையும் வெல்ல முடியாத பரிதாபம்

0
626
Ireland

இன்று அயர்லாந்து அணி இரண்டாவது டி20 போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது. மேலும் டி20 தொடரையும் சமனில் முடித்தது.

தென் ஆப்பிரிக்க அணி அபுதாபியில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று இருந்தது.

- Advertisement -

அதிரடி சதம் அடித்த அயர்லாந்து வீரர்

இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த அணிக்கு முதல் டிக்கெட்டுக்கு 13 ஓவர்களில் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ரோஸ் அடைர் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 58 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டம். இதைத்தொடர்ந்து டக்ரோல் 13 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

வழக்கம்போல் முடிக்க முடியாமல் கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்ட்டன் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து ரீஷா ஹென்றிக்ஸ் 32 பந்தில் 51 ரன் எடுத்தார்.

இன்னொரு முனையில் எய்டன் மார்க்ரம் 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9, வியான் முல்டர் 8, பாட்ரிக் க்ருகர் 5, பீட்டர் 4, லிசார்ட் வில்லியம்ஸ் 0, பார்ச்சூன் 0, லுங்கி நிகிடி 3 என ஒற்றை இலக்க ரன்களே எடுத்தார்கள். இவர்களுக்கு நடுவில் பிரிட்ஸ்கி 41 பந்தில் 51 ரன்கள் எடுத்து போராடி 19 ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : தோனி பணத்துக்கு ஆசைப்பட்டு அதை செய்யல.. சிஎஸ்கே இந்த 4 வீரர்கள தக்க வைக்கும் – அஜய் ஜடேஜா விளக்கம்

தென் ஆப்பிரிக்கா அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கு 23 ரன்கள் எடுக்க வேண்டியது இருந்தது. அந்த அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் தற்போது 1-1 சமநிலையில் முடிந்துவிட்டது. மேலும் சார்ஜாவில் ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வெல்ல முடியாமல் தென் ஆப்பிரிக்கா இழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -