தொடங்கிய இரானி கோப்பை.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. ருதுராஜ் முதல் இஷான் கிஷன் வரை பங்கேற்பு

0
234

இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரான இரானி கோப்பை 2024 போட்டி இன்று நடப்பு ரஞ்சி சாம்பியன் மும்பை அணிக்கும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்கள் பங்கு பெறுவதால் இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.

- Advertisement -

ரஞ்சி சீசனில் பட்டத்தை வென்ற மும்பை அணிக்கும், நடப்பு சாம்பியன் ஆன ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையேயான இராணி கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி இன்று காலை 09.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் மும்பை அணிக்கு அஜிங்கியா ரகானே கேப்டன் ஆகவும் பிரித்வி ஷா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர், தனுஷ் கோட்டியான் மற்றும் சர்துல் தாக்கூர் போன்ற நட்சத்திர வீரர்கள் இருக்கின்றனர்.

எதிர் அணியான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ருத்ராட்ஜ் கெயிக்குவாட் கேப்டன் ஆகவும் அபிமன்யு ஈஸ்வரன் துணை கேப்டன் ஆகவும் இருக்கின்றனர். மேலும் சாய் சுதர்சன், படிக்கல், இஷான் கிஷான் யாஷ் தயாள், கலீல் அகமது உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியானது நடப்பு ரஞ்சி சாம்பியன் அணிக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்களை கொண்ட அணிக்கும் இடையே நடைபெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த போட்டி மும்பையில் நடைபெற இருந்த இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

ரஞ்சி சீசனில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி ராணி கோபையில் விளையாட இடம் பிடித்துள்ளது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இந்தப் போட்டி அனைத்து நாட்களும் காலை 09.30 மணி அளவில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியை ஜியோ சினிமா மற்றும் இணையதளத்தில் நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:மீண்டும் கிரிக்கெட் ஆடும் சச்சின் டெண்டுல்கர்.. டி20 லீக்கில் மாஸ் கம்பேக்.. ரசிகர்கள் உற்சாகம்

அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெறுவதால் இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்.

- Advertisement -