முதல் இன்னிங்சில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்சில் சதம்… புதிய வரலாறுகளை படைக்கும் இந்தியாவின் எதிர்கால வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால்!

0
3269

இராணி கோப்பையில் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார் இளம்வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால்.

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில், ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு இராணி கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. குவாலியர் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் மோதின.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு, அபிமன்யு ஈஸ்வரன் 154 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இளம்வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடைத்தார். உள்ளூர் போட்டிகளில் இவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும்.

யஷஷ்வி ஜெய்ஸ்வால், 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 484 ரன்கள் அடித்தது.

அதன்பிறகு முதல் இன்னிங்சில் விளையாடிய மத்திய பிரதேசம் அணி 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. யாஷ் தூபே(109) சதம் அடித்தார், ஹர்ஷ் கௌலி(54) மற்றும் சரண்ஸ் ஜெயின்(66) இருவரும் அரைசதம் அடித்திருந்தனர்.

- Advertisement -

வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி இம்முறை வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒரு முனையில் நன்றாக நின்றுகொண்ட யஷஷ்வி ஜெய்ஸ்வால், இளம் வீரராக இருந்தாலும் முதிர்ச்சியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளையும் யஷஷ்வி ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் மற்றும் இரட்டை சதம் அடித்த வெகு சில வீரர்களின் பட்டியலில் இவரும் இணைந்திருக்கிறார்.

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. மொத்தமாக 400+ ரன்கள் முன்னிலையுடன் இருக்கிறது. இந்த இன்னிங்ஸில் 135 ரன்கள் அடித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். இவர் இரட்டை சதம் கடக்கும் பட்சத்தில் இன்னும் பல சாதனைகளையும் படைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.