ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனை டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில் ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருபதாவது ஓவரின் ஸ்டார்க் வீசி வெறும் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதன் மூலம் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சூப்பர் ஓவரையும் மிட்செல் ஸ்டார்க் வீசினார். இதில் அவர் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக சூப்பர் ஓவரில் நான்கு பந்துகள் முடிந்த நிலையில், டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த சூழலில் ஸ்டார்க்கை பலரும் மிக சிறந்த டி20 வீரர் என்று கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐபிஎல் டி20 போட்டிகள் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். பும்ரா சிறிது காலம் விளையாடவில்லை என்றதும் ஸ்டார்க் தான் சிறந்த வீரர் என்பது போல் ஒரு கருத்து உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்டார்க் இதுவரை 47 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்த சூழலில் ஸ்டார்க் பும்ரா ஆகியோர் 47 ஐபிஎல் போட்டிகள் முடிவில் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ஸ்டார்க் தன்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு தான் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு அவர் வந்தார். ஆனால் பும்ரா தன்னுடைய 47வது ஐபிஎல் போட்டியை 2017 ஆம் ஆண்டு இறுதி போட்டியிலே விளையாடிவிட்டார்.
அந்த வகையில் இரண்டு நம்பர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது கொஞ்சம் முடியாத காரியமாக இருந்தாலும் யார் சிறப்பாக செயல்பட்டதற்காக என்பதை தற்போது பார்க்கலாம். 47 ஐபிஎல் போட்டிகள் முடிவில் பும்ரா 46 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் ஸ்டார்க் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இதில் நான்கு விக்கெட்டுகளுக்கு மேல் பும்ரா ஒரு முறை கூட எடுக்கவில்லை. ஆனால் ஸ்டார்க் மூன்று முறை எடுத்திருக்கிறார். இதேபோன்று இந்த 47 போட்டி முடிவில் பும்ராவின் பந்துவீச்சு சராசரி 30 என்ற அளவில் இருக்கிறது. ஆனால் ஸ்டார்க்கின் பந்துவீச்சு சராசரி வெறும் 22 என்ற அளவில் தான் இருக்கின்றது. எக்கனாமி பொருத்தவரை பும்ரா 8 புள்ளி 09 என்ற அளவில் இருக்கிறார்.
ஆனால் ஸ்டார்க் 8.45 என்று கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றார். மும்பையின் வெற்றியில் பும்ராவின் சராசரி 21.65 என்று அளவில் இருக்கிறது. ஆனால் ஸ்டார்க் சராசரி 16 என்று அளவில்லை இருக்கின்றது. பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிகளில் பும்ரா நான்கு போட்டிகளில் விளையாடிருக்கிறார்.
ஸ்டார்க்கும் நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. ஆரஞ்ச் தொப்பி, பர்பில் தொப்பி முதலிடத்தில் யார்.. டாப் 10 வீரர்கள் பட்டியல்
ஆனால் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை தான் வீழ்த்தி இருக்கிறார். ஸ்டார்க் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பும்ராவின் சராசரி 21 என்ற அளவில் இருக்கின்றது. ஆனால் ஸ்டார்க்கின் சராசரி 13 என்ற அளவில் தான் இருக்கின்றது. இதனால் இதிலும் ஸ்டார்க் தான் வெற்றி பெற்றிருக்கிறார்.
47 போட்டிகள் முடவில் பார்த்தோம் என்றால் பும்ராவை விட ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது.