ஐபிஎல் வரலாற்றில் தங்களது பெயர்களை மாற்றிய 4 ஐபிஎல் அணிகள்

0
699
Kochi Tuskers Kerala CSK

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆணிகள் ஆரம்பத்தில் ஒரு பெயரை வைத்து பின்னர் பெயரை சில காரணங்களுக்காக மாற்றும். இருப்பினும் ஒரு சில அணிகள் ஆரம்பத்தில் இருந்து ஒரே பெயரால் இயங்கி வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகள் ஆரம்பத்தில் இருந்து ஒரே பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மறுப்பக்கும் ஒரு சில அணிகள் சில காரணங்களுக்காக தங்கள் அணியின் பெயரை மாற்றம் செய்திருக்கின்றனர். அப்படி ஆரம்பத்தில் ஒரு பெயரை வைத்துவிட்டு பின்னர் தங்களது பெயரை ஒரு சில காரணங்களுக்காக மாற்றிய சில ஐபிஎல் அணிகளை பற்றி தற்போது பார்ப்போம்.

கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா

2011ம் ஆண்டு ஒரே ஒரு ஆண்டு மட்டும் கொச்சி அணி ஐபிஎல் தொடரில் விளையாடியது அதன் பின்னர் நடந்த ஒரு சில விஷயங்கள் அந்த அணி தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் அந்த அணியின் பெயர் இந்தி கமாண்டோஸ் என்றுதான் இருந்தது. அந்தப் பெயரை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன காரணத்தினால் பின்னர் பெயரை மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதன் பின்னரே கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா என்கிற பெயரை அந்த அணி மாற்றம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அணி நிர்வாகம் கேரளாவில் அதிக பொழுதுபோக்கு வரி வசூலிக்கப்பட்ட காரணத்தினால் அகமதாபாத் மைதானங்களில் வைத்து போட்டியை நடத்த முடிவு செய்தது. இருப்பினும் இதையும் ரசிகர்கள் விரும்பாத காரணத்தினால், பின்னர் கேரளா அரசாங்கத்துடன் ஒரு சில முடிவுகள் எடுத்துக் கொண்டு, மீண்டும் கொச்சியில் வைத்து அனைத்து போட்டிகளையும் நடத்தியது.

ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இல்லாத இடத்தை நிரப்ப, இரண்டு அணிகள் வந்தது.அதில் ஒரு அணி தான் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்.

முதலில் இந்த அணியின் பெயர் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் என்று இருந்தது அதன் பின்னர் இந்த அணியின் நிர்வாக உறுப்பினர்கள் இந்த அணியின் பெயரை
ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் என மாற்றினார்கள். மேலும் இந்த அணியை முதலில் மகேந்திர சிங் தோனி வழிநடத்தினார். அதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்று விளையாடியது.

இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை இடம் இந்த அணி தோல்வி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ்

2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்கிற பெயரில் விளையாடத் தொடங்கிய இந்த அணி, அதனுடைய ஆரம்ப ஐபிஎல் தொடர்களில் ஷேவாக், கௌதம் கம்பீர், மஹேல ஜெயவர்தன, ஜாஹிர்கான் போன்ற வீரர்களை கொண்டு விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு இந்த அணி நிர்வாகம் தங்களது அணியின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் என்கிற புதிய பெயரை இந்த அணிக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது.

பெயர் மாற்றம் இந்த அணிக்கு உதவி புரிந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பெயர் மாற்றிய வருடமே(2019) இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதற்கு அடுத்த ஆண்டு (2020) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் கிங்ஸ்

2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணி முதல் வருடமே அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு மிக சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இருப்பினும் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி கடும் இந்த அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஆறு ஆண்டுகள் சுமாராக விளையாடிய இந்த அணியின் பெயரை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்தது. எனவே இந்த வருடம் (2021) பஞ்சாப் கிங்ஸ் என்கிற புதிய பெயரில் களமிறங்கியது. கே எல் ராகுல் தலைமையில் டேவிட் மலான், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், முகமது ஷமி, ஜய் ரிச்சர்ட்சன் எனது அடி வீரர்களை கொண்டு விளையாடிய இந்த அணி எட்டு போட்டிகள் முடிவில் மூன்று போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

எனவே மீதமுள்ள 6 போட்டிகளில் இந்த அணி எப்படி விளையாட போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன்படி பெயர் மாற்றம் இந்த அணிக்கு உதவி புரிகிறதா இல்லையா என்பது இறுதியில் தான் தெரியும்.