ஜெய்ஸ்வால் பிரித்வி ஷா மாதிரி ஆகப்போறீங்க.. சாய் சுதர்சன பார்த்து இதுல திருந்துங்க – பசித் அலி விமர்சனம்

0
155
Basit

இந்திய அணியின் இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால் பிரித்திவி ஷா மாதிரி ஆகிவிடக் கூடாது எனவும் சாய் சுதர்சனைப் பார்த்து தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 5 போட்டிகளில் விளையாடி மூன்று அரை சதங்களுடன் 273 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் நிக்கோலஸ் பூரன் 288 ரன்கள் எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெய்ப்வாலுக்கு ஏற்பட்ட சரிவு

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்த பொழுது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஜெய்ஸ்வால் அசத்தினார். இதற்கு அடுத்து அவரிடமிருந்து ஒரு அரை சதம் வந்தது. ஆனால் அவர் மிட்சல் டார்க் இடம் சிக்கி தனது விக்கட்டுகளை தொடர்ந்து பறிகொடுத்து ஃபார்மை ஓரளவுக்கு இழந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் ஒரு வாய்ப்பைப் பெற்ற அவரால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்த வாய்ப்பை மிகச் சிறப்பான முறையில் ஸ்ரேயாஸ் ஐயர் பயன்படுத்திக் கொண்டு தற்பொழுது இந்திய அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து விட்டார். மேலும் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்திருக்கும் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்கும் விதம், அவர் பேட்டிங் செய்யும் விதம் கவலை அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் உணர்ந்து மாற வேண்டும்

இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “நான் சாய் சுதர்சனை முதல்முறையாக பார்த்த பொழுது அவருக்கு 27, 28 வயது இருக்கும் என்று நினைத்தேன். பிறகு அவருக்கு 23, 24 வயதுதான் ஆகிறது என்பதை தெரிந்து கொண்டேன். அவரது முகத்திலும் கண்களிலும் கிரிக்கெட் தெரிகிறது. அவர் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்க கூடியவர் என்பதை காணலாம். அவருடைய இலக்கு முதல் இடத்தை நோக்கியதாக இருக்கிறது”

இதையும் படிங்க : 2 தமிழ்நாட்டு பசங்கள கண்ட்ரோல் பண்ண முடியல.. கூப்டா கூட வரதில்ல – கோச் பார்த்திவ் படேல் பேட்டி

“தற்பொழுது ஜெய்ஸ்வால் வயிறு நிரம்பி விட்டது போல் தெரிகிறது. ஜெய்ஸ்வால் தன்னுடைய கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். இது அவரைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட செய்தி. நீங்கள் இந்த தவறை செய்யாதீர்கள் இல்லையென்றால் கிரிக்கெட் உங்களை அதிகமாக அழ வைக்கும். தற்போது பிரித்திவி ஷாவுக்கு என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் கிரிக்கெட்டை விரும்பி பழையபடி உங்கள் ஆர்வத்தை கொண்டு வாருங்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது அவர் பூஜ்ஜியமாக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -