கண்ணாயிரம் அந்த கால்குலேட்டரை எடு..! சிஎஸ்கே,மும்பை, ஆர்சிபி,ஆர்ஆர்,லக்னோவின் பிளே ஆப் வாய்ப்பு.. விவரம் இதோ

0
1361

ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் அனைவரும் கால்குலேட்டர் வைத்து சுற்றப் போகும் வாரம் வந்துவிட்டது. பண்டிகை காலத்தில் ரயிலுக்கு முன்பதிவு செய்ய எப்படி நாமெல்லாம் காத்திருப்போமோ, அதேபோல் பிளே ஆப்க்கு செல்ல பல அணிகள் காத்திருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதிய முக்கிய ஆட்டம் தற்போது தர்மசாலாவில் நடந்து முடிந்திருக்கிறது.

இதில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 187 ரன்கள் அடித்த நிலையில் ராஜஸ்தான் அணி இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்று வாய்ப்புக்கு காத்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயம் பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. ராஜஸ்தான் அணி, 14 புள்ளிகளை பெற்றாலும் இன்னும் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அப்படியே இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் மும்பை மற்றும் ஆர்சிபி அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அப்படி நடக்கும் பட்சத்தில் மும்பை அணியும் ஆர்சிபி அணியும் 14 புள்ளிகளிலேயே தங்கிவிடும்.

ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் 14 புள்ளிகளில் இருந்தாலும் பெங்களூர் அணியின் ரன் ரேட் அதிகமாக இருக்கிறது. இதனால் குஜராத் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பெங்களூரு குறைந்தபட்சம் ஐந்து ரன்கள் வித்தியாசத்திலாவது தோற்க வேண்டும். அப்படி நடந்தால் ராஜஸ்தானின் ரன் ரேட்டை விட குறைவாக பெங்களூர் சென்று விடும்.

- Advertisement -

இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற முடியும். மும்பை அணியின் ரன் ரேட் தற்போது மைனஸில் தான் இருக்கிறது. இதனால் அவர்கள் கடைசி ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே போதுமானது. குஜராத் அணி முதல் இடத்தைப் பிடிக்க சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடலாம்.

அப்படி ஒருவேளை தோற்றால் மும்பையும் பெங்களூர் அணியும் கண்டிப்பாக தங்களுடைய கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும். இதனால் எஞ்சிய மூன்று இடத்திற்கு யார் வரப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இது ஹாலிவுட் திரில்லர் படத்தை விட சிறப்பாக இருக்கிறது என ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.