ஐபிஎல் மினி ஏலம்.. வீரர்கள் பெயர் பட்டியல் வெளியானது.. 2 கோடி அடிப்படை விலையில் யார்?

0
12407

ஐபிஎல் 2023 ஆண்டிற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இதில், 991 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து  714 பேரும், வெளி நாட்டில் இருந்து 227 பேரும் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து 57 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தம் 7 பிரிவில் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 2 கோடி ரூபாய், ஒன்றரை கோடி ரூபாய்,   ஒரு கோடி ரூபாய், 75 லட்சம் ரூபாய் ,50 லட்சம் ரூபாய் உள்ளிட்ட 7 பிரிவில் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

இதில் மார்க்கியூ வீரர்கள் எனப்படும் நட்சத்திர வீரர்கள் பட்டியலில்   அடிப்படை விலையாக இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்து 21 வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்காத இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகியோர் தங்களது

  அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்து உள்ளனர். அதேபோன்று ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரான் கிரீன் தன்னுடைய பெயரை அதிகபட்ச விலைக்கு பதிவு செய்துள்ளார். சன்ரைசர்ஸ்  அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் , வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயத்துள்ளனர்.

- Advertisement -

ஆஸ்திரேலிய வீரர்கள்  டிராவிஸ் ஹெட்,  கிறிஸ் லின், இங்கிலாந்து வீரர் டாம் பேண்டன்,  சி எஸ் கேவிலிருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ் ஜார்டன், ஆடம் மிலின் தங்களது அடிப்படை விலையை 2 கோடியாக நிர்ணயித்துள்ளனர்.
டி20 உலக கோப்பையில் சுழற்பந்துவீச்சில் அசத்திய  ஆதில் ரசித் 2 கோடி ரூபாய் வீரர்களுக்கான பட்டியலில் உள்ளனர்.

  இந்தப் பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை என்பதே வேடிக்கையான விசயம். கொல்கத்தாவிலிருந்து விடுவிக்கப்பட்ட ரஹானே தனது பெயரை 50 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்து இருக்கிறார். மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட உனாட்கட்டும் தனது விலையை 50 லட்சமாக குறைத்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 75 லட்சம் ரூபாய்க்கு பெயரை பதிவு செய்திருக்கிறார்
பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த மாயங் அகர்வால் மற்றும் மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

25 வீரர்களை  ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக  தேர்வு செய்யலாம். ஏற்கனவே சில வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சமாக 87 வீரர்கள் இந்த மினி ஏலத்தில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் 991 பேர் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால் இந்த பட்டியலை மேலும் குறைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.