ஐபிஎல் ஏலம்..”எனக்கெதிரா இந்த திட்டத்தை தீட்டிருக்காங்க.. உடைக்க ரெடி” – தமிழக வீரர் ஷாருக்கான் அதிரடி பேச்சு!

0
757
Khan

நாளை நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் இந்திய வீரர்களில், இந்திய அணிக்கு இதுவரை விளையாடாத தமிழக வீரர் ஷாருக்கான் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏனென்றால் இவர் பினிஷிங் ரோலில் பவர் ஹிட்டிங் விளையாடக் கூடியவராக இருக்கிறார். ஆனால் இவருக்கு கடந்த மூன்று வருடங்களில் ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்பில் பெரிதாக எதுவும் செய்ய முடியாமலே இருக்கிறது. ஆனால் ஐபிஎல் அணிகள் இவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும் இன்னும் குறையவில்லை.

- Advertisement -

இவரை முதன் முதலாக பஞ்சாப் அணிதான் வாங்கியது. இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திலும் பஞ்சாப் அணியை திரும்ப இவரை வாங்கியது. ஒன்பது கோடிக்கு வாங்கப்பட்ட இவரை பஞ்சாப் இந்த ஆண்டு வெளியே விட்டிருக்கிறது.

மீண்டும் ஏலத்திற்கு வரும் தமிழக வீரர் ஷாருக்கான் இதைவிட அதிக விலைக்குப் போவார் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஷாருக்கானும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தன் பேட்டிங் குறித்து பேசி உள்ள ஷாருக்கான் ” உங்களால் கடைசி கட்டத்தில் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க முடியாத பொழுது மக்கள் உங்களைப் பற்றி தவறாக தீர்ப்பளித்து விடுவார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் உங்களால் கடைசி கட்டத்தில் சிக்ஸர்கள் அடிக்க முடியாது. ஒரு பும்ரா அல்லது ஒரு நடராஜனுக்கு எதிராக அப்படி அடிக்கவும் முடியாது. நான் கடைசி வரை விளையாடுவதற்கு மட்டுமே முயற்சி செய்கிறேன்.

- Advertisement -

ஒரு ஓவரில் 15, 20 ரன்கள் எடுத்தால் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அதை நீங்கள் ஒரு முறை தவற விட்டு விட்டால் நீங்கள் திறமையற்றவர் என முடிவு செய்கிறார்கள். ஆனால் நான்கைந்து பந்துகளில் 10 ரன்கள் எடுப்பது டி20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான ஒன்று. இதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

எனக்கு இயல்பிலேயே நல்ல பவர் இருக்கிறது. தவறாக அடிக்கும் பந்து கூட என்னிடமிருந்து சிக்சர் பறக்கும். என்னால் நல்ல லென்த் பந்துகளை கூட தூக்கி சிக்ஸர் அடிக்க முடியும். அதனால் எனக்கு இந்த விஷயத்தில் எதையும் சிக்கலாக நான் பார்க்கவில்லை.

பொதுவாக எனக்கு பந்துவீச்சாளர்கள் வைடு யார்க்கர்களை வீசும் திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் என்னால் அந்தப் பந்துகளில் டபுள்ஸ் எடுக்க முடியும். ஆனால் பவுண்டரிகள் அடிப்பது கடினம். பந்தைத் தவிர விட்டால் டாட் வந்து ஆகிவிடுகிறது.

இப்படி எனக்கு இவர்கள் வீசுகின்ற காரணத்தினால் தேர்ட் மேன் மற்றும் பைன் லெக் பீல்டர்களை உள் வட்டத்தில் வைக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் கீப்பர் இல்லை பைன் லெக் பீல்டருக்கு தலைக்கு மேல் திரும்பி ரேம்ப் சாட் விளையாடினால் ரன்கள் சுலபமாக வந்துவிடும் என்று தெரியும். எனவே நான் இதை உள்நாட்டுப் போட்டிகளில் பயிற்சி செய்து வருகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!