ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் SRH அணி பல அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னாள் தென்னாஃப்ரிக்க வீரர் ஹென்ரிச் க்ளாசனை விடுவிக்க வாய்ப்புள்ளது. 2025 சீசனுக்கு முன்பு SRH அணி க்ளாசனை 23 கோடிக்கு தக்கவைத்தது.
இது அப்போது மிக அதிக தக்கவைப்புத் தொகையாக இருந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை மற்றும் பெரும் தொகைக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கவில்லை. வலது கை பேட்ஸ்மேன் ஆன க்ளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, உலகளாவிய டி20 ஃபிரான்சைஸ் லீகுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
காவ்யா மாறன் திட்டம்:
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் க்ளாசனை விடுவிப்பதன் மூலம் SRH தங்கள் பர்ஸை கணிசமாக அதிகரிக்க முடியும். 2025 ஐபிஎல் சீசனில் ஆறாவது இடம் பிடித்த அவர்கள், பெரிய பர்ஸுடன் அணியை வலுப்படுத்த முயல்வர். 2024 இல் இறுதிப்போட்டி விளையாடிய பின்னர் அவர் பெரிய அளவு சோபிக்க்ல்வில்லை. ஏலத்தில் க்ளாசனை குறைந்த விலைக்கு மீண்டும் பெறவும் அவர்கள் திட்டமிடலாம்.
காவ்யா மாறனின் திட்டம்படி, 23 கோடி கூடுதலாக ஏலத்திற்குச் செல்வது முக்கிய இடங்களை நிரப்ப உதவும் . பந்துவீச்சுத் தாக்குதலை உருவாக்கவும், மிடில் ஆர்டரை சரியாக்க உதவும். ஏலத்தில் கிளாசனை தென்னாஃப்ரிக்க வீரரை சுமார் 15 கோடிக்கு மீண்டும் பெறவும், மீதித் தொகையை வேறு ஒரு வீரருக்கும் பயன்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.
க்ளாசன் செயல்பாடு:
பல அணிகள் க்ளாசன் மீது கண் வைத்துள்ளன மற்றும் ஏலத்தில் அவர் இருந்தால் அவரைப் பெற முயலும் என்றும் கூறப்படுகிறது. ஹென்ரிச் க்ளாசன் முதலில் 2018 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். 2019 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார்.
இதையும் படிங்க: 2026 டி20 உகோ-க்கு கம்பீர் கண்டுபிடித்துவிட்ட மந்திரம் .. ஒன்று மட்டுமே சிக்கல் – கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து
நீண்ட இடைவெளிக்குப் பின் 2023 இல் SRH அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹைதராபாத்துடனான முதல் சீசனில் 12 போட்டிகளில் 448 ரன்கள் எடுத்தார். அடுத்த 2024 சீசனில் 16 போட்டிகளில் 479 ரன்கள் குவித்தார். 2025 சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 44.27 சராசரியுடன், 172.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் எடுத்தார். ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். கடந்த சீசனில் அவரது செயல்திறன் மோசமாக இல்லை என்றாலும், பெரும் விலைக்கு ஏற்றதாக இல்லை என்று கருதப்படுகிறது. மொத்தம் 49 ஐபிஎல் போட்டிகளில் 1480 ரன்கள், 2 சதங்கள், 7 அரைசதங்கள் உட்பட அவர் அடித்துள்ளார்.






