2026 டி20 உகோ-க்கு கம்பீர் கண்டுபிடித்துவிட்ட மந்திரம் .. ஒன்று மட்டுமே சிக்கல் – கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து

0
17
Gambhir

அடுத்த வருடம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு சரியான காம்பினேஷனை கம்பீர் கண்டுபிடித்து விட்டதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தற்போது இந்திய டி20 அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளை வென்றால் தொடரை வெல்ல முடியும் என்கின்ற சூழல் நிலவுகிறது.

- Advertisement -

கம்பீர் கண்டுபிடித்த மந்திரம்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் யாதவ் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை கம்பீர் விளையாட வைத்திருந்தார். அவர் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை என்றாலும் கூட ஆறாவது இடத்தில் பேட்டிங் வந்து அதிரடியாக 22 பந்தில் 49 ரன்கள் குவித்தார். இவரது பேட்டிங் இப்பொழுது முன்னணி பேட்ஸ்மேன்கள் போல மாறி இருக்கிறது.

தற்போது குல்தீப் யாதவ் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர் வருவதால், அர்ஸ்தீப் சிங் மாதிரியான ஒரு சிறப்பு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்க முடிகிறது. இதன்மூலம் இந்திய தொடக்க வேகப்பந்து வீச்சு கூட்டணி அனுபவமும் திறமையும் வாய்ந்ததாக மாறுகிறது. எனவே வாஷிங்டன் சுந்தர் மூலம் கம்பீர் மந்திரத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா வருகை

அடுத்து ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணிக்குள் நுழைந்து விட்டால், அவருடன் பும்ரா, அர்ஸ்தீப் என ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் அமைந்துவிடும். வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி என ஸ்பின் பௌலிங் யூனிட்டும் அமைந்து விடும். இதன் மூலம் சரியாகவும் அதே சமயத்தில் ஆறு பௌலிங் ஆப்ஷன்களும் கிடைத்துவிடும்.

இதையும் படிங்க : உலக டி20 தொடர்கள்.. அஸ்வினுக்கு நடந்த 2வது சோகம்.. ஐபிஎல்ல ஓய்வு பெறாமல் இருந்திருக்கலாமே? – ரசிகர்கள் வருத்தம்

மேலும் சஞ்சு சாம்சன் இடத்தில் ஜிதேஷ் சர்மா விளையாடும்போது அவர் கீழ் வரிசையில் வருவார். மேல் வரிசையில் குறிப்பாக முதல் நான்கு இடங்களில் கில், அபிஷேக் ஷர்மா சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா என்பது முடிவாகிவிடும். இதனால் பேட்டிங் வரிசையில் குழப்பம் இருக்காது. மேலும் ரிங்கு சிங், சிவம் துபே போன்றவர்கள் வெளியில் இருக்க வேண்டும் இல்லை வாய்ப்பு கிடைக்காது. தற்போது இந்த அணியில் கில் இடத்தில் ஜெய்ஸ்வால் இருந்தால் சிக்கலே இருக்காது என்பதுதான் கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை!

- Advertisement -