கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை IPL 2026 சீசனுக்கு முன்பாக உதவி பயிற்சியாளராக நியமித்துள்ளது. அனைத்து அணிகளும் நவம்பர் 15, சனிக்கிழமைக்குள் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
KKR அணி தங்கள் அதிகாரப்பூர்வ X தளத்தில், ஒரு பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் சீசனுக்கு முன்பாக அவரை தங்கள் அணிக்குள் வரவேற்று பதிவிட்டுள்ளது. வாட்சன் IPL வரலாற்றில் சிறந்த வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.குடும்பத்தில் சேர்வதற்கு வரவேற்கிறோம் வாட்சன் என கொல்கத்தா அணி குறிப்பிட்டுள்ளது.
வாட்சன் IPL-இல் இரண்டு முறை MVP விருதை வென்றுள்ளார். 2008-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் IPL சீசம் வென்றபோது முதல் முறையாக MVP ஆனார். 2013-இல், RR-க்காக விளையாடியபோது மீண்டும் இந்த விருதை வென்றார். ஐபிஎல் தொடரில் 145 போட்டிகளில் விளையாடிய வாட்சன், 2008-இல் RR உடன் தனது பயணத்தைத் தொடங்கினார்.
அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். வாட்சன் 3874 ரன்கள் எடுத்துள்ளார்.இதில் 4 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் உள்ளன.மேலும் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் மூன்று முறை IPL கோப்பையை வென்றுள்ளார். 2008-இல் RR உடன் மற்றும் 2018 மற்றும் 2021-இல் CSK உடன் இரண்டு முறை கோப்பையை வென்றார்.
வாட்சன் இப்போது KKR-இல் தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் மெண்டர் டுவைன் பிராவோ ஆகியோருடன் பயிற்சியாளர் குழுவில் இணைவார்.
KKR-க்கு IPL 2025 சீசன் மோசமாக அமைந்தது 2024-இல் மூன்றாவது IPL கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த ஆண்டு தங்களது பட்டத்தை தற்காக்கத் தவறியது. பிளேஆஃப்களுக்கு கூட தகுதி பெறவில்லை.
இதையும் படிங்க: கில் ஜெய்ஸ்வால் இல்லை.. இவர்தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர் – டெம்பா பவுமா பேட்டி
லீக் கட்டத்தில் 14 போட்டிகளில் வெறும் 5 வெற்றிகளுடன் அவர்கள் எட்டாவது இடத்தில் இருந்தனர்.
2024-இல் அணியை வழிநடத்திய ஷ்ரேயஸ் ஐயரை விடுவித்தது அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அஜிங்க்யா ரஹானே கேப்டனாக செயல்பட்டாலும், அணியை பிளேஆஃப்களுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. லீக்கின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான கொல்கத்தா மூன்று முறை பட்டம் வென்றுள்ளது. 2012-இல், CSK வை இறுதிப் போட்டியில் வீழ்த்தி தங்களது முதல் பட்டத்தைப் பெற்றனர். 2014-இல், கிங்ஸ் XI பஞ்சாப் அணியை தோற்கடித்து மீண்டும் வென்றனர்.