ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே இந்த சம்பவத்தை செய்யும்.. இந்த 3 பேர் வாங்குவார்கள்- ஆகாஷ் சோப்ரா

0
30

ஐபிஎல் 2026 ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்குவதில் சிஎஸ்கே அணி அதிக ஆர்வம் காட்டாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஐந்து முறை சாம்பியனான இந்த அணி, கிரீனுக்காக சிறிது நேரம் ஏலம் கேட்கலாம் என்றும், ஆனால் அவரைப் பெறாவிட்டால் அதைப் பெரிதாகக் எடுத்து கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு செல்லும் சிஎஸ்கே அணியிடம் ரூ.43.40 கோடி பர்ஸ் உள்ளது. அபுதாபியில் டிசம்பர் 16ஆம் தேதி நடக்கும் இந்த மினி ஏலத்தில் அதிகபட்சம்  4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை வாங்க முடியும். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “சென்னை அணி மிக அரிதாகவே ஒருவருக்கு ரூ.25-30 கோடி செலவழிக்கும். அது அவர்களின் ஸ்டைல் அல்ல.”

- Advertisement -

சிஎஸ்கேக்கு கிரீன் தேவையில்லை:

“கேமரூன் கிரீனுக்காக சிறிது நேரம் போட்டியிடலாம். பின்னர் அவருக்குத் தேவையில்லை என்று சொல்லிவிடலாம். சில சமயம்  மற்ற அணியின் விலையை உயர்த்திவிடுவார்கள்.ஆனால் அவரைப் பெறாவிட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைப்பார்கள்.”

“சிஎஸ்கே கேமரூன் கிரீனில் அதிக ஆர்வம் காட்டாது போல் தெரிகிறது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு ஆர்வம் காட்ட வேண்டியிருக்கும். டாப் 6 நன்றாக இருப்பது போல் தெரிகிறது.ஆனால் அனைத்தும் சரியாக இல்லை. சற்று அனுபவக் குறைவு தெரிகிறது. வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் அவர்களை ஆட வைக்கலாம்.”

- Advertisement -

ஸ்பின்னர்கள் தேவை:

“லியாம் லிவிங்ஸ்டனை விரும்பலாம். டெவான் கான்வேயை திரும்ப வாங்கலாம். ஜானி பாரிஸ்டோ அவர்களுக்கு அதிகம் பொருந்தாது. ஆர்டரின் கீழே ஆடக்கூடிய ஜேமி ஸ்மித்தை விரும்பலாம். டேவிட் மில்லரில் ஆர்வம் காட்டலாம். இவ்வளவு பணம் இருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு வெளிநாட்டு பேட்ஸ்மேன்களாவது வாங்குங்கள்.”

இதையும் படிங்க: சுப்மன் கில்லுக்கு புதிய இடம் தாருங்கள்.. அவசரப்பட்டு நீக்க வேண்டாம்.. முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கருத்து

“ஸ்பின்னர்கள் தேவை. ரவி பிஷ்னோய்க்காக அதிக பணம் தருவார்கள். ஏனெனில் அவர் கட்டாயம் தேவை. நூர் அஹ்மதுக்கு பார்ட்னர் தேட வேண்டும். அதிக பார்ட்னர்கள் இல்லை. கர்ன் ஷர்மா, பிஷ்னோய், ராகுல் சஹார், பின்னர் விக்னேஷ் புதூர், குமார் கார்த்திகேயா ஆகியோர் இருப்பார்கள். சிஎஸ்கேதான் ரவி பிஷ்னோயை வாங்கும் என்று நினைக்கிறேன். வேறு யாராலும் அவ்வளவு பணம் செலவழிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

- Advertisement -