ஐபிஎல் 2026 ஏலத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேயிங் XI எவ்வாறு இருக்கும் என்று முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான்,
கணித்துள்ளார். IPL 2026 மினி ஏலத்தில், ஐந்து முறை சாம்பியன்களான CSK அணி அன்கேப்ட் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீரை தலா ₹14.2 கோடிக்கு வாங்கியது.
மொத்தம் ஒன்பது புதிய வீரர்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது. தனது யூடியூப் சேனலில் வீடியோவில் பேசிய இர்பான் பதான், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அயுஷ் மஹத்ரே ஆகியோரை ஓப்பனர்களாகவும், சஞ்சு சாம்சனை நம்பர் 3-இலும் வைத்தார்.
“சென்னை அணி தனது தத்துவத்தை முழுமையாக மாற்றிவிட்டது. முன்பு அனுபவமிக்க வீரர்களை நம்பியது, இப்போது இளம் வீரர்களை ஆதரிக்கிறது.”
ரூட்டை மாற்றிய சிஎஸ்கே:
” ஏல வரலாற்றில் இதுவரை ஒரு அணி ரூ.14 கோடிக்கு மேல் ஒரு அன்கேப்டு வீரருக்கு செலவு செய்ததில்லை. ஆனால் இந்த ஏலத்தில் சென்னை இரு அன்கேப்ட் வீரர்களுக்கு தலா ரூ.14.20 கோடி செலவு செய்தது. பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவுக்கு தலா ரூ.14.20 கோடி. இதற்கு முன்பே சஞ்சுவை டிரேட் மூலம் கொண்டு வந்திருந்தனர்.”
“லைக்-ஃபார்-லைக் ரீப்ளேஸ்மென்ட்டுகளை முயற்சித்துள்ளனர். குறிப்பாக இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் பாத்திரத்தில் பிரசாந்த் வீர், மற்றும் கார்த்திக் சர்மாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வரும் ஒரு ஃபினிஷரை கண்டறிந்துள்ளனர். அவருக்கு 160 ஸ்ட்ரைக் ரேட், 12 போட்டிகளில் 28 சிக்ஸர்கள். அதனால்தான் அவரில் முதலீடு செய்தனர்.”
சிஎஸ்கே பிளேயிங் லெவன்:
” உடனடியாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து உண்மையாக ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை. மகேந்திர சிங் தோனி நம்பர் எட்டில் இருக்க வேண்டும், அதற்கு கீழே இல்லை. ஏனென்றால், அவரது பங்கு இன்னும் முக்கியமானது என்று நினைக்கிறேன். நான்கு ஓவர்கள் பேட் செய்யாவிட்டால், அந்த முக்கியமான இடத்தில் அணிக்கு பிரச்சனை வரும்.”
இதையும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு ஒரே ஒரு கவலை தான்.. இந்த விசயத்தில் குழப்பம்..முன்னாள் வீரர்கள் கருத்து
2025 சீசனில் தோனி 14 போட்டிகளிலும் ஆடி, 13 இன்னிங்ஸ்களில் 196 ரன்கள் சராசரி 24.50, ஸ்ட்ரைக் ரேட் 135.17 எடுத்திருந்தார். இர்பான் பதான் CSK ப்ளேயிங் XI-இல் இம்பாக்ட் ப்ளேயராக கலீல் அஹ்மதை தேர்வு செய்தார். பௌலிங் பிரிவில், அன்ஷுல் கம்போஜை நம்பர் 9-இல் வைத்தார் இர்பான். CSK பிளேயிங் XI: ருதுராஜ் கெய்க்வாட், அயுஷ் மஹத்ரே, சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா, சிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அஹ்மத், நாதன் எல்லிஸ். இம்பாக்ட் ப்ளேயர்: கலீல் அஹ்மத்.






