ஐபிஎல் 2025.. ஒரே இன்னிங்சில் 141 ரன்கள்.. ஆரஞ்ச் தொப்பி இடத்தில் அபிசேக் சர்மாவுக்கு எந்த இடம்? பர்பிள் தொப்பியில் சிஎஸ்கே வீரர் முதலிடம்

0
15

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மட்டும் டெஸ்ட் மேட்ச் போல் ஆடி வருகின்றனர். இந்த நிலையில் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மொத்தமாகவே 103 ரன்கள் தான் அடித்து இருந்தது.

ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் 141 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த நிலையில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி போட்டிகளில் அபிஷேக்சர்மா எந்த இடத்தை பிடித்தார் என்று உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள்.

- Advertisement -

அபிசேக் சர்மா எந்த இடம்?

ஆம் அபிஷேக்சர்மா 141 ரன்கள் அடித்தும் அவர் ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் டாப் 10 இடத்தில் கூட இல்லை என்பதுதான் சோகமான விஷயம். அதற்கு காரணம் அபிஷேக் ஷர்மா ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் பெரிய ஸ்கோர் அடித்திருக்கிறார். எஞ்சிய ஐந்து இன்னிங்ஸ்களும்  கடுமையாக சொதப்பி இருக்கிறார்.

இதனால் அவர் மொத்தமாகவே 192 ரன்கள் அடித்து 12வது இடத்தில் தான் இருக்கின்றார். இந்த பட்டியலில் நிக்கோலஸ் பூரான் 349 ரன்களுடன் முதலிடத்திலும் சாய் சுதர்சன் 329 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும் லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் 265 ரன்கள் உடன் மூன்றாம் இடத்திலும் பஞ்சாப் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 250 ரன்கள் உடன் நான்காவது இடத்திலும், ஜாஸ் பட்லர் 215 ரன்களுடனும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

சிஎஸ்கே வீரர் முதலிடம்:

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நூர் அகமத் 6 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை கைப்பற்றி சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்திருக்கிறார். 

இதையும் படிங்க: என் மகன் மேல எனக்கு மூடநம்பிக்கை இருந்தது.. அந்த 30 செகண்ட் மாத்திடுச்சு – அபிஷேக் ஷர்மா தந்தை பேட்டி

11 விக்கெட் வீழ்த்தி சர்துல் தாக்கூர் இரண்டாவது இடத்திலும், குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டு வீழ்த்தி மூன்றாம் இடத்திலும், சாய் கிஷோர் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காம் இடத்திலும், சிராஜ் 6 போட்டிகளில் 10 விக்கெட்  வீழ்த்தி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
மற்றொரு சிஎஸ்கே வீரரான கலீல் அகமத் 6 போட்டிகளில் 10 விக்கெட் இழுத்து ஏழாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -