ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் நான்கு நாட்கள் தான் போட்டி முடிவடைந்துள்ளது. ஆனால் பல அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தி இருக்கிறார்கள். மேலும் தங்களுக்கு வழங்கப்படும் இலக்கை வேகமாக துரத்தி ரன் ரேட்டையும் அதிகமாக வைத்து இருக்கிறார்கள்.
இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் ஐந்து அணிகள் முதல் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இதில் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் மட்டும் குறைவாக இருப்பதன் காரணமாக நான்காவது இடத்தில் இருக்கிறது.
தோனியின் ஸ்டைல் இது தான்:
மும்பை அணி நிர்ணயித்த குறைந்தபட்ச இலக்கை சிஎஸ்கே அணி 15வது ஒவரில் சேஸ் செய்திருந்தால் சிஎஸ்கேவின் ரன் ரேட் அதிகமாகி இருக்கும். ஆனால் சிஎஸ்கே கடைசி ஓவரில் தான் இலக்கை சேஸ் செய்கிறது. சிஎஸ்கே அணி மட்டும் ரன் ரேட் பற்றி கவலையே படுவதில்லை.
இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து தோனி கேப்டனாக இருந்தபோது கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர் சொன்ன பதிலை தற்போது பார்க்கலாம். “என்னைப் பொருத்தவரை ரன் ரேட்டை விட புள்ளிகள் தான் முக்கியம். நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்று விட்டால் உங்களுக்கு ரன் ரேட் பற்றி கவலைப்பட தேவையில்லை.”
புள்ளிகளுக்கே முக்கியத்துவம்:
“நான் வேகமாக இலக்கை சேஸ் செய்ய வேண்டும் என்று அதிரடியாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்போதும் இரண்டு புள்ளிகளைப் பெறவே முக்கியத்துவம் தர வேண்டும்.”
இதையும் பாருங்க: ஸ்ரேயாசை விட்டு ஷஷான்க் சிங்கை பாருங்க.. 40 ரன் பவுலிங்ல தந்தாலும் இனி கைதட்டுவிங்க – அஸ்வின் பேட்டி
“அதற்காக ரன் ரேட் பற்றி கவலை பட வேண்டாம் என நான் சொல்லவில்லை. அதன் மீதும் கவனம் வைக்க வேண்டும். ஆனால் சூழலுக்கு ஏற்ப புரிந்து தான் விளையாட வேண்டும் என்று தோனி கூறியுள்ளார்.”மேலும் சிஎஸ்கே விளையாடும் பெரும்பான்மையான போட்டிகள் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் தான் நடைபெறுகிறது. இந்த ஆடுகளம் தோய்வாக மாறுவதால் பேட்டிங் செய்யும்போது அதிரடி காட்ட முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர்.
இதன் காரணமாக தான் சிஎஸ்கே அணி ரன் ரேட் பற்றி கவலைப்படாமல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.






