நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதத்தை தியாகம் செய்ததும், ஷஷான்க் சிங் விளையாடிய விதம் குறித்தும் இந்திய முன்னாள் வீரர் மற்றும் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னில் இருந்த பொழுது, தன்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ஷஷான்க் சிங்கிடம் கூற, இதைப் பயன்படுத்திய அவர் சிராஜ் வீசிய இருபதாவது ஓவரில் 23 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணியால் வெற்றி பெற முடிந்தது. எனவே இருவரது செயலையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
230 என்பது 180
இந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்றும், நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்று இருந்தால், பஞ்சாப் கிங்ஸ் பவுலர்கள் எந்த அளவிற்கு விமர்சனம் செய்யப்பட்டு இருப்பார்கள் என்பது குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய கோணத்தில் இருந்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” நேற்று ஸ்ரேயாஸ் சதம் அடித்து, பஞ்சாப் கிங்ஸ் 233 ரன்கள் மட்டும் எடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று இருந்தால், இவ்வளவு பெரிய இலக்கை பாதுகாக்க முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் பவுலர்கள் விமர்சனம் செய்யப்பட்டு இருப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது 230 என்பது 180 ரன் ஆக இருக்கிறது. இந்த 50 ரன் வித்தியாசம் எவ்வளவு பெரியது என கற்பனை செய்து பாருங்கள்”
ஷஷான்க்தான் பெரிய வித்தியாசம்
“ரொம்ப உண்மையை சொல்வது என்றால் ஸ்ரேயாஸ் சதத்தை தியாகம் செய்தது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவர் சதத்திற்காக பேட்டிங் செய்ய சென்று இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த இடத்தில்தான் ஷஷான்க் சிங் விளையாடிய கேமியோ எவ்வளவு வித்தியாசத்தை உண்டு செய்து இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்”
இதையும் படிங்க : ஐபிஎல்-ல் 2 வெளிநாட்டு வீரர்கள்தான் பிளேயிங் லெவன்ல இருக்கணும்.. காரணம் பஞ்சாப்ப பாருங்க – பசித் அலி பேச்சு
“ஒரு பந்துவீச்சாளர் டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 40 ரன்கள் கொடுத்தால், அதற்காக ரசிகர்கள் கைதட்டும் காலமும் வரும். அது வெகு தொலைவில் இல்லை. ரஷித் கான் பதினெட்டாவது ஓவரில் 20 ரன்கள் கொடுத்தார். இதற்கு முன் அவர் கடைசியாக இப்படி ரன் கொடுத்து நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? அவர் ஒரே இரவில் மோசமான பந்துவீச்சாளர் ஆகிவிடக் கிடையாது+ என்று கூறியிருக்கிறார்.






