ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கிறது.
இந்த போட்டி இரு அணிக்கும் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த ஆட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வெற்றி பெறும் என்று சஞ்சய் பங்கர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணியிடம் பலம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்துவது தோனி என்பதை மறந்து விட வேண்டாம்.
சேப்பாக்கத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் ஆடுகளம் செயல்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மாறி வருகிறது. முன்பு அவர்கள் சீனியர்களை நம்பியே இருந்தார்கள். தற்போது மற்ற அணிகளை போல் அவர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள்.
அதேசமயம் சன்ரைசர்ஸ் அணியை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாடாமல் வெற்றி வாய்ப்பை கோட்டை விடுகிறார்கள் என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 21 முறை மோதி இருக்கிறது. அதில் சிஎஸ்கே அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் ஐந்து முறை மோதி இருக்கிறார்கள்.இந்த ஐந்து போட்டியிலும் சிஎஸ்கே அணியை வெற்றி பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: ஹைதராபாத்திடம் சேப்பாக்கத்தில்.. தோனிக்கு காத்திருக்கும் வரலாற்று பிரச்சனை.. காப்பாற்றுவாரா?
இந்த நிலையில் இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. சேப்பாக்கம் ஆடுகளத்தில் எந்த அணி எல்லாம் வெற்றி பெற அதிக காலம் எடுத்துக் கொண்டதோ அவர்கள் எல்லாம் இந்த சீசனில் வெற்றியை தழுவி இருக்கிறார்கள். இதனால் சன்ரைசர்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை வெற்றியை பெறவில்லை என்ற ஒரு ரெக்கார்டு உள்ள நிலையில் அதனை சிஎஸ்கே முடிவுக்கு கொண்டு வந்து விடுமோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.