ஹைதராபாத்திடம் சேப்பாக்கத்தில்.. தோனிக்கு காத்திருக்கும் வரலாற்று பிரச்சனை.. காப்பாற்றுவாரா?

0
89
Dhoni

இன்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு வரலாற்று சவால் ஒன்று காத்திருக்கிறது.

தற்போது சிஎஸ்கே மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என இரண்டு அணிகளுமே தங்களுடைய முதல் 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளை மட்டுமே வென்று இருக்கின்றன. மேலும் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்க சிஎஸ்கே அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

தனிப்பட்ட முறையில் முக்கியமான போட்டி

இந்த போட்டியில் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பத்தாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறலாம், இல்லை ரன் ரேட் அடிப்படையில் எட்டாவது இடத்திற்கும் முன்னேறலாம். அதே சமயத்தில் ஹைதராபாத் அணி எட்டாவது இடத்திற்கு முன்னேற வேண்டுமென்றால் இந்த போட்டியை வெல்ல வேண்டும்.

இந்த வகையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தங்கி விடாமல் இருப்பதற்கு இரண்டு அணிகளுக்குமே தனிப்பட்ட முறையில் இந்த போட்டியில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இருவருக்குமே பிளே ஆப் வாய்ப்புகள் 99 சதவீதம் முடிந்து விட்டது என்றாலும் கூட, இந்த தனிப்பட்ட போட்டி சுவாரசியமானதாக அமைகிறது.

- Advertisement -

வெற்றி வரலாறு தொடருமா?

இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஐந்து போட்டிகளில் விளையாடி இருக்கும் சிஎஸ்கே அணி ஒருமுறை கூட தோல்வியடைந்தது கிடையாது. ஹைதராபாத் அணி கடந்த முறை அபாரமான ஃபாமில் இருந்த பொழுதும் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. நாங்கள் வாங்கியதிலே சிறந்த ஆர்சிபி வீரர் இவர் தான்.. ஆண்டி பிளவர் கருத்து

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி மோசமான நிலையில் இருந்து வருகின்ற காரணத்தினால் இந்த வரலாற்று வெற்றி சாதனையை மகேந்திர சிங் தோனி தக்க வைப்பதற்கு கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும். எனவே இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தோனி இந்த சாதனையை தக்க வைக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் தோனி தலைமையில் சிஎஸ்கே சொந்த மைதானத்தில் முதல்முறையாக ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வி அடையும் வரலாற்று நிகழ்வு நடக்கும்!

- Advertisement -