நாங்க கடைசி இடத்துல இருக்க தகுதியான ஆளுங்க.. எங்க பேட்டிங் ஆர்டர் தப்பு கிடையாது – சிஎஸ்கே பிளமிங் கருத்து

0
100
Fleming

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் சிஎஸ்கே அணி இருப்பதற்கு தகுதியானது என சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் வீரர்களை தவறாக வாங்கிய காரணத்தினால், ஐபிஎல் வரலாற்றில் தங்களுடைய சிறப்பு சாதனைகளை எல்லாம் தகர்த்து மோசமான சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் ஏலத்தில் சரியான வீரர்களை வாங்க முடியாததற்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாங்கள் கீழே இருக்க தகுதியானவர்கள்

தற்போது சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு தங்களது பிளேயிங் லெவனை எப்படி உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் டாப் ஆர்டரில் இருந்து ரன்கள் வராத காரணத்தினால், ஜடேஜா மற்றும் அஸ்வினை மேலே அனுப்ப வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றும் சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்டீபன் பிளம்மிங் கூறும் பொழுது ” உண்மையில் நாங்கள் புள்ளி பட்டியலில் கீழே இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. இது எங்களுக்கு உந்துதலை தரக்கூடியது கிடையாது. நாங்கள் நல்ல செயல் திறனை மட்டுமே வெளிப்படுத்த விரும்பினோம். சில செயல் திறன்களை ஒன்றிணைக்கவும் நினைத்தோம். ஆனால் எங்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. நாங்கள் விளையாடிய முறைக்கு நாங்கள் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்க தகுதியானவர்கள். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை”

- Advertisement -

ஜடேஜா அஸ்வின் முன்னால் வந்தது ஏன்?

“நாங்கள் எங்களுடைய பேட்டிங் ஆர்டரை மறுசீரமைக்க எப்பொழுதும் வேலை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டுக்கான வலுவான யோசனைகள் எங்களிடம் இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு எங்களால் அதை செய்ய முடியாது. ஏனென்றால் எங்களுடைய டாப் ஆர்டரிடம் இருந்து ரன்கள் வரவில்லை”

இதையும் படிங்க : தப்பிக்க வழியே இல்ல.. தோனி கேப்டன்சில இது நடந்திருக்க கூடாது.. கண்ணீர் வடிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்

“நாங்கள் எவ்வளவு சிறப்பாக ஆரம்பத்தில் பேட்டிங்கை தொடங்குகிறோம் என்பதை பொறுத்து தான் அடுத்த யார் பேட்டிங் செய்ய வரவேண்டும்? என்பது தீர்மானிக்கப்படுகிறது. எங்களுக்கு நாங்கள் நினைத்தபடி மேலே இருந்து ரன்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் நல்ல இன்னிங்சை உருவாக்குவதற்கு பதிலாக சரி செய்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -