ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது ஏழாவது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில இருக்கிறது. சிஎஸ்கே, எஞ்சிய போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப்க்கு செல்ல முடியும்.
ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் கொஞ்சம் முன்னேற்றம் கண்டு இருக்கிறது. விஜய் சங்கர், ராகுல் திருப்பாதி போன்ற வீரர்களும் நீக்கப்பட்டனர். சி எஸ் கே அணியின் பவர் பிளேவில் மெதுவாக விளையாடி வந்த ரச்சின் ரவிந்த்ராவும் அதிரடியாக நீக்கியது. அவர்களுக்கு பதில் ஷேக் ரசித், ஆயுஷ் மாத்ரே என புதிய இளம் ஜோடியை சிஎஸ்கே களம் இறக்கியது.
இதேபோன்று நான்காவது வீரராக களம் இறங்கிய பிரெவீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று சிக்சர்கள் ஒரே ஒவரில் அடித்து அசத்தினார். இந்த சூழலில் சிஎஸ்கே அணி எஞ்சிருக்கும் ஐந்து போட்டிகளிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சிஎஸ்கே அணியில் நேற்றைய ஆட்டத்தில் தீபக் ஹூடா இடம்பெற்றிருந்தால் அவரை அதிரடியாக நீக்கிவிட்டு வான்ஸ் பேடிக்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதிரடியாக ஆட கூடிய விக்கெட் கீப்பர் என்பதால் அவருக்கு இந்த சீசனிலே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வந்த நிலையில் கடைசி கட்டத்தில் இளம் வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுத்தது. இதில் ருதுராஜ் அபாரமாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை கடைசியில் பெற்றது.
இதனால் 2021 ஆம் ஆண்டு பலமான அணியை கட்டமைத்த சிஎஸ்கே எளிதில் வெற்றி பெற்றது. எஞ்சியிருக்கும் போட்டிகளில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அடுத்த சீசனுக்கு அணியை தற்போது கட்டமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்று நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதையும் படிங்க: தோனி உங்களுக்கான நேரம் வந்துருச்சு.. இப்ப இத மட்டும் செய்யுங்க திரும்ப அசத்தலாம் – அனில் கும்ப்ளே அறிவுரை
வெறும் ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சிஎஸ்கே அணி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்காவது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.