ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ராகுல் அபாரமாக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 400 ரன்கள் நெருங்கி வரும் ராகுல் ஏற்கனவே மூன்று அரை சதம் அடித்திருக்கிறார். குறிப்பாக பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி சார்பாக ராகுக் விளையாடினார்.
ராகுல் 93 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். அப்போது இது என்னுடைய மைதானம் என்று அவர் கொண்டாடிய ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கே எல் ராகுலின் மாமனாரும் பாலிவுட் நட்சத்திரமான சுனில் ஷெட்டி ராகுலின் ஆட்டத்தை பாராட்டி பேசி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ராகுலின் அந்த ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போதும் அவர் செய்ததை பார்க்கும்போது எனக்கு உடல் எல்லாம் புல்லரிக்கின்றது. தங்கள் மீது நம்பிக்கை வைத்து இதை செய்ய முடியும் என்று நினைத்து செய்து காட்டும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இது போன்ற தருணம் நிச்சயம் அமைய வேண்டும்.
நான் ராகுலின் பல ஆட்டங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஆர் சி பி அணிக்கு எதிராக 93 எண்கள் அடித்தவுடன் நான் உடனே ராகுலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இந்த ராகுலை தான் நான் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றும் அவரிடம் கூறினேன்.
உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராகுல் நன்றாக விளையாடினார். அவரால் ஆட்டத்தை முடிக்க முடியும் என்றும் நமக்கு காட்டினார். ராகுல் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். முன்பெல்லாம் வலைப்பயிற்சியில் மற்றும் ஜிம்மில் சென்று பயிற்சி செய்வார்.அதில் மட்டும் தான் கவனம் செலுத்துவார். தற்போது அவர் என்னுடைய இயக்குனர்கள் மற்றும் வசனங்களை எழுதிக் கொடுக்கும் வசனகர்த்தாவுடன் பயிற்சி செய்து வருகிறார் என நினைக்கிறேன் என்று நகைச்சுவையாக கூறினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. இந்த வீரரை எதற்காக சிஎஸ்கே வைத்திருக்கிறது.. ஆகாஷ் சோப்ரா கேள்வி
தொடர்ந்து பேசியவர் ராகுல் தம் விளையாடும் கிரிக்கெட்டை விரும்ப வேண்டும் என்று நினைத்து விட்டார். சில சமயம் சமூக வலைத்தளத்தில் வரும் கருத்துக்கள் கடும் நெருக்கடியில் ஏற்படுத்தலாம் ஆனால் ராகுல் இம்முறை தன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைக்கின்றார். இம்முறை தொடர்ந்து சிக்சர் அடிப்பது தான் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை ராகுல் உணர்ந்து இருப்பதால் தற்போது அதிரடி காட்டி வழி நடத்துகிறார்.