ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறும் நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி இன்று இரவு எதிர்கொள்கிறது. இனி எஞ்சிருக்கும் 5 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று சில அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனுக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கியது. இந்தத் தொடரில் மொத்தமாகவே அவர் மூன்று இன்னிங்ஸில் 21 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். பந்துவீச்சிலும் 72 ரன்களில் ஆறு ஓவர்களில் விட்டுக்கொடுத்து விக்கெட்டும் அவர் வீழ்த்தவில்லை
வெற்றி பெற முடியும்:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கின்றது. இந்த சீசனை பொருத்தவரை அந்த அணி தொடரை விட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்று நினைக்கின்றேன். சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஆயுஷ் மாத்ரே மற்றும் சேக் ரசித் என இரண்டு வீரர்கள் மட்டும் சிறப்பாக விளையாடினால் கிடைக்காது.”
“மற்ற வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். வைபவ் போன்ற சிறுவனால் சாதிக்க முடிகிறது என்றால் நிச்சயம் சிஎஸ்கேவில் உள்ள வீரர்களாலும் சாதிக்க முடியும். சிஎஸ்கே அணியில் எப்போதுமே தனித்துவமான வீரர்கள் தனி ஆளாக நின்று போட்டியே மாற்றி இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே, சிவம் துபே, ஷேக் ரசித் போன்ற வீரர்கள் உள்ளனர்.”
சாம் கரண் எதற்காக இருக்கிறார்:
“அது போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் ஷாம்கரன் எதற்காக விளையாடுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் அவர் பார்முக்கு திரும்பலாம். ஒருவேளை கான்வே மீண்டும் விளையாடினால் அவரும் இன்று பட்டையைக் கிளப்பலாம். தனிநபர் வீரர் சிறப்பாக விளையாடாத வரை உங்களால் நினைத்த ஸ்கோரை தொட முடியாது.”
இதையும் படிங்க: சுனில் நரைனை பார்த்து சாம்பியன் மும்பையே பயப்பட்டது.. அப்ப நாங்க இந்த முடிவை எடுத்தோம் – அம்பதி ராயுடு பேட்டி
“நினைத்த ஸ்கோரை சேஸ் செய்யவும் முடியாது. என்னை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் ஷாம்கரனை சிஎஸ்கே அணி வெளியே உட்கார வைக்க வேண்டும். இந்திய பவுலர்களை வைத்து இன்று விளையாடுங்கள் தேவைப்பட்டால் என்று அஸ்வினை கூட சேர்த்துக் கொள்ளலாம்” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.






