ஐபிஎல் 2025: டெல்லி லக்னோ போட்டியில் விளையாடாத நடராஜன்.. உண்மையான காரணம் என்ன.?. முழு விவரம்

0
1434

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் லக்னோ அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களை விளாசி அபார வெற்றியை பெற்றது.

சிறப்பாக ஆடிய அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 66 ரன்களை விளாசினார். 20 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவர், அடுத்த 11 பந்துகளில் 46 ரன்களை விளாசியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஷுதோஷ் சர்மாவை இந்தியாவின் பொல்லார்ட் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

நடராஜன் விளையாடவில்லை

இதனிடையே டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நடராஜன் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் நடராஜன் விளையாடாததற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதன்படி நடராஜன் ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாகவே டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அவர் கடந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் விளையாடிய பின் தோளில் காயம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சையில் நடராஜன் இருந்து வந்தார். இதனாலே தமிழக ரஞ்சி அணிக்காகவும் விளையாடாமல் இருந்தார்.

காயமடைந்த நடராஜன்

இந்த காயத்தில் இருந்து நடராஜன் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இதனாலேயே பிளேயிங் லெவனில் நடராஜன் சேர்க்கப்படாதது தெரிய வந்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் போது நடராஜன் ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டார். தமிழக வீரர்களில் அதிக தொலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் நடராஜனும் ஒருவர்.

அவர் இன்னும் பயிற்சியையே தொடங்காமல் இருக்கும் சூழலில், எப்போது களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் முதல் பாதி ஐபிஎல் தொடரில் நடராஜன் விளையாட வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. அவர் களமிறங்கும் பட்சத்தில், டெல்லி அணி கூடுதல் வலிமை பெறும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -