ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று முக்கிய ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் கொல்கத்தா அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதனால் கொல்கத்தாவுக்கு இது வாழ்வா சாவா என்ற போட்டியாகும். எனினும் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்க கூடாது என்ற நிலையில் இருக்கிறது.
ஜடேஜா குறித்து விமர்சனம்:
இந்த சூழலில் தனது youtube சேனலில் சிஎஸ்கே அணி குறித்து பேசி உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, சாம் கரனை ஏன் தொடர்ந்து மூன்றாவது வீரராக அனுப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதேபோன்று ஜடேஜா நான்காவது வீரராக விளையாடுகிறார். ஜடேஜா கடைசியாக ஆர் சி பிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடினாலும் அவரால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜடேஜா ஒரு பந்துக்கு ஒரு ரன் என்பது போல் அடித்து வந்தார். அது சரி கிடையாது. என்னை கேட்டால் தென்னாபிரிக்க வீரர் பிரவேசை முன் வரிசையில் களம் இறக்குதல், இல்லையென்றால் பிரவீசை நான்காவது வீரராக வைத்துக் கொள்ளுங்கள்.
தோனி பேட்டிங் வர தேவையில்லை;
ஜடேஜாவை ஐந்தாவது வீரராக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் சிவம் துபே ஆறாவது வீரராக களத்திற்கு வருவார். தோனி பேட்டிங் வரிசையில் இருக்க வேண்டும். ஆனால் சூழல் தேவைப்படும் பட்சத்தில் மட்டும்தான் அவர் களத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் அவர் பேட்டிங் செய்ய வர தேவையில்லை.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல் இடையில் நிறுத்தப்படுகிறதா.. தொடர் முழுதும் நடக்காதா?.. பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கும் வீரராக ஆயுஷ் மாத்ரே இருக்கின்றார். அவர் அபாரமாக விளையாடி வருகிறார். அவருடைய ஒவ்வொரு நாளையும் அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தவர். 17 வயது வீரர் இவ்வளவு செய்ய முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் தமக்கு எந்த ஒரு சுமையும் இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆயுஷ் மாத்ரே நல்ல பேட்டிங் யுக்தியும் இருக்கின்றது. மேலும் பந்து ஸ்டெம்பை நோக்கி வந்தால் அதை எதிர்கொள்வதில் மட்டும் ஆயுஷ் மாத் ரேவுக்கு பிரச்சனை இருக்கின்றது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.






