ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025.. சிஎஸ்கே கோட்டை விட்டார்கள்.. நடு ஓவர்களில் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருக்கனும்.. ராபின் உத்தப்பா

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி தற்போது ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதனால் இம்முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா என்ற சந்தேகம் இருந்துள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா அணியின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிஎஸ்கே அணி பஞ்சாப் எதிரான போட்டியில் நல்ல முறையில் தான் சேஸிங்கை தொடங்கினார்கள்.

அதிரடியாக ஆட வேண்டும்:

ஒரு ஓவருக்கு 9.8 என்ற அளவில் ரன் ரேட் வைத்திருந்தார்கள். அது இது போன்ற ஓபனர்களை வைத்துக்கொண்டு எடுத்த நல்ல ரன் ரேட் என்று தான் நான் சொல்வேன். ஆனால் நடுஓவர்களில் ஆட்டத்தை நாம் தவற விட்டு விடக்கூடாது. அதுவும் பெரிய இலக்கை சேஸ் செய்யும் போது ஏழாவது ஓவரிலிருந்து 12வது ஓவர் வரை மிகவும் முக்கியமானது.

ஆனால் அங்கு சிஎஸ்கே அணி மிகவும் அமைதியாக பேட்டிங் செய்தது. பவர்பிளே முடிந்தவுடன் உங்களுக்கு பெரிய ஓவர்கள் வேண்டும். இதன் மூலம் ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்று குவிப்பதன் மூலம் நாம் எதிர் அணியின் மீது அழுத்தத்தை கொண்டு செல்லலாம். பவர் பிளேவில் சரியாக விளையாடுவது என்பது ஒன்று.

- Advertisement -

சிஎஸ்கே கோட்டை விட்டார்கள்:

அதே போல் நடு ஓவர்களின் நன்றாக விளையாடினால் மட்டுமே போட்டிகளில் நாம் வெற்றி பெற முடியும். ஆனால் சிஎஸ்கே அணி அதில் கோட்டை விட்டுவிட்டது. கடைசி இரண்டு ஓவரில் 42 ரன்கள் என்பதெல்லாம் ரொம்பவும் அதிகம். இதில் நடு ஓவர் மட்டும் சிஎஸ்கே கூடுதலாக ஒரு 15, 20 ரன்கள் அடித்திருந்தால் கடைசியில் வெறும் 22 முதல் 25 ரன்கள் தான் அடிக்க வேண்டும் என்று இருந்திருக்கும்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. இந்த 3 மாற்றத்தை செய்யாத வரை சிஎஸ்கே தொடர்ந்து தோற்கும்.. திருந்துவாரா ருதுராஜ்?

அதிரடியாக ஆட வேண்டும் என்று எண்ணமே சிஎஸ்கே அணி வீரர்களிடம் இல்லை என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். சி எஸ் கே அணி தற்போது வரும் 11ம் தேதி கொல்கத்தா அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. சிஎஸ்கே அணி தங்களது தவறுகளை சரி செய்யாத வரை வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சி எஸ் கே அணியில் ஏதேனும் மேஜிக் நடக்குமா என்று ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -
Published by