ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்விகளை தொடர்ந்து பெற்று வருவது ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றிலே சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் இவ்வளவு மோசமாக செயல்பட்டது. 2022 ஆம் ஆண்டுதான் அந்த தொடரின் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் எஞ்சி இருக்கிறது. அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
மீண்டும் ஒரே தவறு:
இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணி தொடர்ந்து ருதுராஜை மூன்றாவது வீரராக களம் இறக்குகிறது. அது எந்த பலனையும் அணிக்கு தரவில்லை என்று தெரிந்தும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறது.
இதனால் ருதுராஜ் மீண்டும் நம்பர் ஒன் வீரராக கான்வே உடன் களம் இறங்கி விளையாட வேண்டும். வலது கை, இடது கை காம்பினேஷன், ஏற்கனவே தங்களது திறமையை நிரூபித்த ஜோடி இது என்பதால், இந்த ஜோடி மீண்டும் களமிறக்கினால் மட்டுமே பவர்பிளேவில் அதிக ரன்களை குவிக்க முடியும். இதேபோன்று ரச்சின் ரவீந்திரா மூன்றாவது வீரராக களம் இறக்க வேண்டும்.
வீரர்களை மாற்ற வேண்டும்:
இல்லை என்றால் ரச்சின் ரவிந்திராவை தூக்கிவிட்டு அவருக்கு பதில் நாதன் எலிஸ் என்ற ஆஸ்திரேலிய வேக பந்துவீச்சாளரை வெளிநாட்டு வீரராக சேர்க்க வேண்டும்.ஷாயிக் ரசித், வான்ஸ் பேடி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதை செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலமாகும்.
இதையும் படிங்க: தோனி இல்லை லாராதான் என்னை மாற்றினார்.. பாண்டிங் எனக்கு இப்ப செஞ்சது பெரிய விஷயம் – ஷஷான்க் சிங் பேட்டி
இதேபோன்று ஜடேஜாவை கீழ் வரிசையில் களம் இறக்குகிறார்கள். அதற்கு பதில் ஜடேஜாவை நான்காவது அல்லது ஐந்தாவது வீரராக விளையாட வைக்க வேண்டும். இதன் மூலம் ஜடேஜாவால் இன்னிங்சை கட்டமைக்க முடியும். மேலும் அவர் அதிக பந்துகளை பிடித்து ரன்களை அடிக்க ஏதுவான வாய்ப்பாக இருக்கும். இதையெல்லாம் சரி செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.






