ஐபிஎல் 2025.. புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே.. முதல் இடத்திற்கு செல்ல என்ன செய்யனும்?

0
144

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.முதல் வாரத்திலேயே பல அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியிருக்கிறது. 190 ரன்கள் என்ற இலக்கை கூட 16 வது ஓவரிலே சேஸ் செய்யும் அளவுக்கு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ரன் ரேட் என்பது இம்முறை மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் தான் ஏட்டியது. இதனால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் பெரிய அளவு முன்னேறவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றும் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் தான் இருக்கிறது.

- Advertisement -

ரன் ரேட் முக்கியம்:

பிளே ஆப் சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எப்போதுமே புள்ளிகளை மட்டுமே கவனம் செலுத்துமே தவிர ரன் ரேட் பற்றி கவனிக்காது. ஆனால் ஐபிஎல் தொடர் மாறிவரும் நிலையில் ரன் ரேட் முக்கியமாக மாறி வருகிறது.

இதன் காரணமாக ருதுராஜ் தோனியின் பாதையிலே பயணிப்பாரா இல்லை புதிய ரூட்டை தேர்ந்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் குறைந்தபட்சம் 4 அல்லது 5 ஓவர்கள் எஞ்சிய நிலையில் இலக்கை சேஸ் செய்ய வேண்டும்.

- Advertisement -

முதலிடம் பிடிக்க வாய்ப்பு:

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி புள்ளி  பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் ரன் ரேட் அதிகமாகி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தபட்சம் 200 ரன்கள் அடிக்க வேண்டும். அவ்வாறு அடிக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணியை 40 அல்லது 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

இதையும் படிங்க: சிஎஸ்கேக்கு காத்திருக்கும் சிக்கல்.. முக்கிய ஆயுதத்தை களமிறக்கும் ஆர்சிபி.. என்ன செய்ய போகிறார் ருதுராஜ்?

இதனால் 4 புள்ளிகளை பெறுவது மட்டுமல்லாமல் ரன் ரேட் அதிகமாகி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கலாம். ஒருவேளை சிஎஸ்கே அணி தோல்வியை தழுவினால் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -