கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ரூ.7 கோடி வீரருக்கு ஆர்சிபி அணியில் இடமிருக்காது.. முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே கருத்து

ஐபிஎல் மினி ஏலத்தில் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ஆர்சிபி 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இருப்பினும், ஆர்சிபி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, இந்த டி20 லீக்கின் தொடக்கப் போட்டிகளில் ஐயருக்கு அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயரின் முன்னாள் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் கடும் ஏலப் போட்டிக்கு மத்தியிலும் ஆர்சிபி இவரைச் சேர்த்தது. டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற்ற இந்த ஏலத்தில், ஆர்சிபி ஐயருடன் ஜேக்கப் டஃபி, மங்கேஷ் யாதவ் உள்ளிட்ட பல வீரர்களைக் கையகப்படுத்தி தங்கள் அணியை வலுப்படுத்திக் கொண்டது.

மாற்றம் இருக்காது:

இது தொடர்பாக பேசிய அனில் கும்ப்ளே, “வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்தில் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார். வெற்றி பெறும் அணியில் நீங்கள் தேவையற்ற சந்தேகத்தை உருவாக்க விரும்ப மாட்டீர்கள். அதனால்தான் ரவி பிஷ்னோயியை அவர்கள் எடுக்கவில்லை. இதன் மூலம் சுயாஷ் ஷர்மா ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளரால் அச்சுறுத்தப்படுவதாக எண்ணமாட்டார்”

“ஆர்சிபி தங்களை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. எனவே வெங்கடேஷ் ஐயரை பெற்றதினால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என அனில் கும்ப்ளே தெரிவித்தார். ஆர்சிபி தனது முக்கிய வீரர்களைத் தக்கவைத்ததிலும், ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு டஃபி, பில் சால்ட்டிற்கு காக்ஸ், யஷ் தயாலுக்கு மங்கேஷ் யாதவ் போன்ற வீரர்களைச் சேர்த்ததிலும் சிறப்பாக செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.

- Advertisement -

இந்தியாவின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், ஐயர் உடனடியாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பதில் சந்தேகம் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “கடந்த சீசனில் இருந்து வெங்கடேஷ் ஐயரை பலரும் உற்று நோக்கினர். அவர் சீராக செயல்பட்டார், அவரது நம்பிக்கையையும் நீங்கள் பார்க்கலாம்,”

வெங்கடேஷ் இடம் சந்தேகம்:

“வெங்கடேஷ் உடனடியாக ஆடும் லெவனில் இடம்பெறுவாரா? இது ஒரு நிலையான அணி என்பதால் சந்தேகம் உள்ளது. இடதுகை ஆட்டக்காரர்களை விரும்பிய ஆர்சிபி, அவர்களைப் பெற்றது. குருணால் பாண்டியாவை கடந்த சீசனில் செய்தது போல, ஐயரை லெவனில் சரிசெய்யலாம். குருணால் சிறப்பாக விளையாடியதால் சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படவில்லை. சுயாஷ் ஷர்மாவும் நல்ல சீசனைப் பெற்றிருந்தார்,” என்றார்.

எனினும் ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர், வெங்கடேஷ் ஐயரை வாங்கியதில் மகிழ்ச்சி தெரிவித்தார். “வெங்கடேஷ் ஐயரிடம் வலிமையான தலைமைப் பண்புகள் உள்ளன. இது களத்திற்கும், டிரஸ்ஸிங் ரூமிற்கும் சிறப்பானது. இவரைப் பெற்றதில் மகிழ்ச்சி; அவருடன் பணியாற்ற ஆவலாக உள்ளேன்,” என்றார்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் SMAT கப் அடிக்க முக்கிய காரணம் தோனி தான்.. இவ்வளவு வேலை பார்த்தார் – ஷாபாஷ் நதீம் பேட்டி

கேமரூன் கிரீனை வாங்கிய பிறகு கேகேஆர் பர்ஸில் கூடுதல் பணம் இருந்ததாக ஆண்டி ஃப்ளவர் குறிப்பிட்டார். “அவர்கள் அதில் ஒரு பகுதியை வெங்கடேஷ் ஐயருக்காக ருக்கலாம். ஆனாகேட்டிருக்கலாம். இறுதியில், நாங்களே வெங்கடேஷை வாங்கினோம், இதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என ஃப்ளவர் தெரிவித்தார்.

- Advertisement -
Published by

Recent Posts