ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. சஞ்சு சாம்சன் கையில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும்தான் களமிறங்குகிறார். விக்கெட் கீப்பிங் செய்வதில்லை.
இதன் காரணமாக அந்த அணியின் ரியான் பராக் தான் தற்போது கேப்டன்ஷியை செய்து வருகிறார். இந்த சூழலில் கவுஹாத்தியில் இன்று சிஎஸ்கே அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள 14 வயது வீரரான வைபவ் சூர்யவம்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டிராவிட் வைபவ் தற்போது நல்ல முறையில் பயிற்சி செய்து வருகிறார். அவர் திறமை வாய்ந்த வீரராக தான் இருக்கின்றார். ஆனால் அவரைப் போலவே பல திறமை வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்.
எனவே அனைவருக்கும் நாங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
பயப்பட மாட்டோம் என கருத்து:
வைபவ் சூர்யவம்சி போன்ற வீரரை நாங்கள் மெருகேற்ற வேண்டியது எங்களுடைய பொறுப்பு. இதன் காரணமாக இந்த தொடர் எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அவருக்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது. அணி வீரர்கள் எவ்வாறு பயிற்சி செய்கிறார்கள். சர்வதேச வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
இதெல்லாம் அவருக்கு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும். இதனால் தான் உடனே அவரை இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன்பு விளையாடும் என்று சொல்வதை விட அவர் முதலில் பழகிக் கொள்ள வேண்டும். வாய்ப்பு வரும்போது வைபவ் சூரியவம்ஷிக்கு களத்தில் இறக்க நாங்கள் பயப்பட மாட்டோம்.
ரியான் பராக்கிற்கு பாராட்டு:
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ரியான் பராக்கும் ஒருவர் அவர் அதிக பந்துகளை எதிர்கொள்ள நாங்கள் நினைக்கின்றோம். 20 ஓவர் என்பது மிகவும் குறுகிய காலம். இதன் காரணமாக ரியான் பராக் எவ்வளவு பந்துகளை எதிர்கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு எங்கள் அணிக்கு சிறந்ததாக இருக்கும்.
இதையும் படிங்க: 37.75 கோடி.. ஏலத்தில் சிஎஸ்கே செய்த தவறான செலவு.. பிளம்மிங்கால் தோனிக்கு பிரச்சனை.. என்ன நடந்தது?
இதன் காரணமாகத்தான் அவரை நம்பர் மூன்றாவது வீரராக நாங்கள் களம் இறக்கினோம். இதன் மூலம் களத்தில் அவர் அதிக நேரம் செலவிட முடியும். ரியான் பராக் எவ்வளவு அபாயகரமான வீரர் என்று நம் அனைவருக்குமே தெரியும். இதன் காரணமாக தான் நாங்கள் இந்த மாற்றத்தை செய்தோம். ரியான் பராக் எவ்வளவு ரன்கள் அடிக்கிறாரோ அந்த அளவுக்கு அது அணிக்கு நன்மையாக இருக்கும். ரியான் பராக் மூன்றாவது வீரராக இல்லை எந்த இடத்தில் இறங்கினாலும் அவரால் விளையாட முடியும் என்று டிராவிட் கூறியுள்ளார்.






