37.75 கோடி.. ஏலத்தில் சிஎஸ்கே செய்த தவறான செலவு.. பிளம்மிங்கால் தோனிக்கு பிரச்சனை.. என்ன நடந்தது?

0
654
Dhoni

சிஎஸ்கே தக்கவைப்பு மற்றும் ஏலத்தில் மொத்தமாக 37.75 கோடி ரூபாய் குறிப்பிட்டு மூன்று வீரர்களுக்கு செலவு செய்தது வேறு எந்த அணிகளும் செய்யாத ஒரு விஷயமாகவும், சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை உருவாக்கும் ஒரு விஷயமாகவும் மாறி இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு குறிப்பிட்ட விஷயங்கள் வேறு எந்த அணியிலும் இல்லாத மாதிரி சிஎஸ்கே அணியில் அமைந்திருக்கிறது. ஆனால் இது சிஎஸ்கே அணிக்கு எந்தவித முன்னேற்றத்தையும் கொடுப்பதாக இல்லை. மாறாக அணி காம்பினேஷன் வரை பின்னடைவையே உருவாக்குவதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

37.75 கோடி ரூபாய் செலவு

சிஎஸ்கே அணி தக்க வைப்பில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 18 கோடி ரூபாய் கொடுத்தது. இது தொடர்ந்து ஏலத்தில் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமத் 10 கோடி, ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. மொத்தமாக மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சிஎஸ்கே அணியில் 37.75 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் வேறு எந்த அணிகளும் மூன்று முழுமையான சுழல் பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் வைப்பதற்காக வாங்கப்படவில்லை. மேலும் மொத்தத் தொகையான 120 கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கு தொகையை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே செலவு செய்யவில்லை. ஏனென்றால் அதிகபட்சம் இரண்டு பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். மூன்றாவதாக ஒரு பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் இருப்பார். உதாரணமாக கடந்த முறை ராஜஸ்தான அணியில் சாகல், அஸ்வின் இருக்க ரியான் பராக் பகுதி நேர ஸ்பின்னர் ஆக இருந்தார். இரண்டு ஸ்பின்னர்களுக்காக அவர்கள் 15 கோடி ரூபாய் அளவில்தான் செலவு செய்தார்கள்.

- Advertisement -

அஸ்வின் மற்றும் பிளமிங் பேச்சால் தோனிக்கு பிரச்சனை

இந்த நிலையில் சேப்பாக்கம் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதை தெரிந்து இவ்வளவு செலவு செய்து வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தங்களுக்கு சொந்த மைதான சாதகமே இல்லை எனவும், ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை எனவும் கடந்த போட்டி தோல்விக்கு பின்பாகப் பேசி இருந்தார்.

இதையும் படிங்க : 18 வருஷமா செய்யல.. ரோகித் இதுக்கு மேலயா செய்யப் போறார்.. ரொம்ப ஏமாத்திட்டார் – சேவாக் விமர்சனம்

இன்னொரு பக்கத்தில் இந்த முறை சிஎஸ்கே அணிக்கு தன்னை தோனிதான் வாங்கினார் என அஸ்வின் கூறியிருந்தார். நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா போதுமானவர்களாக இருக்க அஸ்வினை தோனிதான் வாங்கினார் என்று அவரே கூறுவது, தற்போது தோனிக்கு சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. இன்னும் தோல்விகள் தொடர்ந்தால் இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -