ஐபிஎல் 2025.. தோனி அடுத்த சீசனும் விளையாடுவார்.. ஏன் தெரியுமா?

0
19

ஐபிஎல் தொடர் ஒவ்வொரு சீசனும் முடிவடையும் நேரத்தில் அனைவர் மத்தியிலும் எழும் ஒரே கேள்வி, தோனி ஓய்வு பெற போகிறாரா? இல்லையா என்பதுதான். தற்போது தோனிக்கு 43 வயதாகிறது. அடுத்து சீசன் விளையாடும் போது அவருக்கு 44 வயதாகி இருக்கும்.

இதனால் இதுதான் அவருடைய கடைசி சீசனாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாகத்தான் சிஎஸ்கே அணி இம்முறை அதிக அளவு இளம் வீரர்களை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தோனி அடுத்த சீசனும் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் தேவை:

இது குறித்து பேசிய அவர், வயதை நீங்கள் ஒரு பொருட்டாக பேசாதீர்கள். தோனி இருந்து போட்டிகளை விளையாடுவதற்கான உடல் தகுதியை பெற்றிருக்கிறார். நாம் இதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். என்னை கேட்டால் அவரால் நிச்சயம் மேலும் ஒரு சீசன் சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியும்.

ஏனென்றால் சிஎஸ்கே அணி தற்போது அணியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பெரிய ஷாட் ஆடும் வீரர்கள் தேவை. மேலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட வேண்டும். இதன் மூலம் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் குறைந்தபட்சம் அடிக்க முடியும்.

- Advertisement -

தோனி, ஜடேஜா தேவை:

இந்த மாதிரியான அணியை கட்டமைக்க வேண்டும் என்றால் அதற்கு தோனியின் பங்கு மிகவும் முக்கியம் தோனியும் ஜடேஜாவும் இல்லை என்றால் இந்த பணி மிகவும் கடினமாக மாறிவிடும். அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் வெறும் இளம் வீரர்களை வைத்துக் கொண்டு விளையாடுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையை தான் ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: மும்பை, டெல்லி அணி இடையே விர்ச்சுவல் நாக் அவுட்.. பிட்ச் ரிப்போர்ட்- விவரம்

இன்னும் சிஎஸ்கே அணியை பொருத்தவரை தோனியும் ஜடேஜாவும் மிகவும் முக்கியமான விருந்தாக திகழ்கிறார்கள். எனவே சிஎஸ்கே அணியின் எதிர்காலத்திலும் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்று அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகள் வெற்றி பெற்றால் ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -