நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மூவரும் 450 ரன்களுக்கு மேல் அடித்து மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். இது குறித்து அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 504 ரன்கள், ஜோஸ் பட்லர் 470 ரன்கள், கேப்டன் சுப்மன் கில் 465 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இவர்களது அபாரமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தற்போது குஜராத் ஐட்டம்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடிய இடத்தில் வலிமையாக இருக்கிறது.
கேப்டன் கில் இப்படிப்பட்டவர்தான்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ஒரே ஆண்டில் நுழைந்தார்கள். அந்த ஆண்டிலிருந்தே இருவரும் அந்த அணிக்கு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தனக்கும் கில்லுக்குமான நட்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து சாய் சுதர்சன் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “நான் கடந்த மூன்று ஆண்டுகளாக எல்லை ஐபிஎல் தொடரில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பேட்டிங்கில் சிரமம் இருந்தாலும் அல்லது குறிப்பிட்ட பவுலரிடம் சிரமம் இருந்தாலும் நான் அவருடன் பேசுவது நல்லபடியாக இருக்கும் என்று நினைப்பேன். அவர் விளையாடுவதை பார்த்து நான் வளர்ந்திருக்கிறேன். மனதளவில் அவர் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த கேப்டன்”
என் திறமை போய்விடும்
“மேலும் கேப்டனாக கில் வீரர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். வீரர்கள் சிரமத்தில் இருக்கும் பொழுது அவர் மிகவும் ஆறுதலாக இருக்கிறார். அது வீரர்கள் மீண்டு வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நாங்கள் களத்தில் நிறைய பழைய நல்ல நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். இந்த ஆண்டு நாங்கள் புதிய நல்ல நினைவுகளை உருவாக்குவோம்”
இதையும் படிங்க : தோனி கிடையாது.. நான் இந்த இந்திய வீரருடன்தான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன் – விராட் கோலி பேட்டி
“ரன்களை பெறுவது என்பது, நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய வகையில் இருப்பதுதான். அங்கு அணி வெற்றி பெறும் என்றால் எந்த பிரச்சனையும் கிடையாது. ரன் குவிப்பில் ஆரஞ்சு தொப்பி என்பது இரண்டாம்பட்ச விஷயம்தான். நீங்கள் ஆரஞ்சு தொப்பியை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால் உங்களுடைய திறமை போய்விடும்” என்று கூறியிருக்கிறார்.






