இங்கிலாந்தில் விளையாட போகும் 31 வயது இந்திய விக்கெட் கீப்பர்.. ஐபிஎல் தொடரில் புறக்கணிக்கப்பட்டதால் முடிவு

0
24

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக அனைத்து அணியில் உள்ள முன்னணி வீரர்களும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் சில ஸ்டார் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இதனால் இந்த இரண்டு மாதத்திற்கு சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக பலரும் வெவ்வேறு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சூழலில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கே எஸ் பரத் தற்போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் புறக்கணிப்பு:

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்திலும் கே எஸ் பரத் எந்த ஒரு அணியாலும் வாங்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு டெல்லி அணியால் கே எஸ் பரத் வாங்கப்பட்டார். எனினும் 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் அவர் எந்த ஒரு போட்டியிலும் விளையாடப்படவில்லை. ஆர் சி பி அணிக்காக 2021 ஆம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் அவர் விளையாடினார்.

அந்தத் தொடரில் ஏழு இன்னிங்ஸில் 191 ரன்கள் கே எஸ் பரத் குவித்தார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் டெல்லி அணி திரும்பிய கேஸ் பரத் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததால் அதிரடியாக நீக்கப்பட்டார். இதுபோன்று 2023 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு சென்ற கே எஸ் பரத்துக்கு ஒரு போட்டியில்  விளையாட வாய்ப்பு தரப்படவில்லை.

- Advertisement -

டெஸ்ட் அணிக்கு திரும்ப திட்டம்:

இதே போன்று 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற  போதிலும் கேஎஸ் பரத் ஒரு ஆட்டத்திலும் விளையாட வில்லை. இந்த சூழலில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விலை போகாத காரணத்தால் தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார்.இதற்காக இங்கிலாந்தில் உள்ள லண்டன் தூல்வீச் கிளப் கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதையும் படிங்க: தோனிக்கிட்ட கம்ப்யூட்டர் தோத்து போகும்.. சாட்சிக்கு இந்த ஒரு விஷயத்தை மட்டும் பாருங்க – ஹர்பஜன் சிங் பாராட்டு

அங்கு சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே எஸ் பரத் விளையாடினார். இதுவரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டியில் விளையாடி மொத்தமாகவே 221 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். கேஸ் பரத் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதன் காரணமாக தான் இந்திய அணியிலிருந்து அவர் ஓரம் கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -