ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விளையாடுவதற்கு பிசிசிஐயின் மருத்துவக்குழு ஒப்புதல் வழங்கிருக்கிறது. ஆனால் ஒரு டிவிஸ்டையும் வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பும்ரா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
இதை அடுத்து பும்ரா எந்த ஒரு போட்டியிலும் இதுவரை பங்கேற்காமல் இருந்தார். அதன் பிறகு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என இரண்டு தொடரிலும் பும்ரா விளையாட வில்லை. இந்த சூழலில் ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்பும் பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி தனது உடல் தகுதியை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
மும்பை அணிக்கு திரும்பும் பும்ரா:
இந்த சூழலில் பும்ரா இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறி வருகிறது. நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வென்று உள்ளார்கள். இந்த சூழலில் பும்ரா எப்போது அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் பும்ராவை சோதித்த மருத்துவ குழு அவரை பந்து வீச அனுமதி அளித்திருக்கிறது.
இதனால் பும்ரா இன்று அல்லது நாளை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்பார் என தெரிகிறது. ஆனால் பும்ரா ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற உள்ள ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என தருகிறது.
டெல்லிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு:
பும்ரா போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வலைப்பயிற்சியில் அவருடைய பந்து வீச்சு முறை எவ்வாறு இருக்கிறது என்பதை சோதித்து மும்பை அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என மருத்துவ குழு தெரிவித்து இருக்கிறது.
இதனை மும்பை சரியாக செய்கிறதா என்று பிசிசிஐ சார்பில் மேற்பார்வையும் செய்யப்பட உள்ளது. இதனால் பும்ரா மும்பை அணியுடன் இணைந்து பயிற்சியில் பங்கு பெற இருக்கிறார். இதில் அவருடைய உடல் தகுதி திருப்திகரமாக இருந்தால் போட்டியில் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: நியூசி.க்கு எதிராக ஒயிட்வாஷ்.. ரசிகரை அடிக்க பாய்ந்த பாக். அணி வீரர்.. விளக்கம் அளித்த கிரிக்கெட் வாரியம்
இதனால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மும்பை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதேபோன்று ரோகித் சர்மாவுக்கும் ஒரு சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ரோகித் சர்மாவும் டெல்லி போட்டிக்கு திரும்புவார் என தெரிகிறது.






