ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. குஜராத்த அணி சிறப்பாக செயல்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தமிழக வீரர் சாய் சுதர்சன் தான்.
காயத்திலிருந்து மீண்டு வந்த சாய் சுதர்சன் தற்போது அபாரமாக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக நிலையான இன்னிங்ஸை ஆடி நல்ல அடிதளத்தை குஜராத் அணிக்கு அவர் அமைத்துக் கொடுக்கின்றார். சாய் சுதர்சன் நடப்பு சீசனில் ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடி அதில் நான்கு அரை சதம் அடித்திருக்கிறார்.
சாய் சுதர்சன் அபாரம்:
இதன் மூலம் சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதன் மட்டும் இல்லாமல் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார். இந்த போட்டியில் பூரான் தான் ஆரஞ்சு தொப்பியை வைத்திருந்த நிலையில் தற்போது லக்னோ அணிக்கு எதிராக சாய் சுதர்சன் அரை சதம் அடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
தற்போது மீண்டும் நிக்கோலஸ் பூரான் ஒரு அரை சதம் அடித்தார் என்றால் சாய் சுதர்சனிடமிருந்து அவர் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றி விடுவார். எனினும் சாய் சுதர்சன் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார். மறுபுறம் குஜராத் அணியின் கேப்டன் ஆன கில் 31 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.
பண்ட்க்கு நெருக்கடி:
தொடர்ந்து அதிரடி காட்டியதில் 38 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். குஜராத் அணி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.குஜராத் அணி 58 பந்துகளில் எல்லாம் 100 ரன்களை கடந்து இருக்கிறது.
இதையும் படிங்க: சிஎஸ்கே வில் இளம் வீரர்களுக்கு எப்போது வாய்ப்பு?.. ஹசி பதிலால் சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்
இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் பண்ட்க்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.நடப்பு சீசனில் மொத்தமாகவே பண்ட் 19 ரன்கள் தான் அடித்திருக்கிறார். மற்றவீரர்கள் அதிரடி காட்டுவதால் லக்னோ வெற்றி பெறுகிறது. இதனால் பண்டை பொறுத்தவரை இது வாழ்வா சாவா என்ற போட்டியாக பார்க்கப்படுகிறது.






