நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு எப்போது வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறித்து சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் தெரிவித்திருக்கும் கருத்து சிஎஸ்கே ரசிகர்களை கோபப்பட வைத்திருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வாங்கி இருக்கும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய அளவில் சொதப்பி வருகிறார்கள். எனவே சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளை தோற்று மிகவும் பின்தங்கி இருக்கிறது. இதன் காரணமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
சிஎஸ்கே ரசிகர்களின் கோரிக்கை
நடப்பு ஐபிஎல் தொடரை எடுத்துக் கொள்ளும் பொழுது மற்ற அணிகளில் இளம் வீரர்களுக்கு எடுத்தவுடன் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இப்படி வாய்ப்பை பெறக்கூடிய இளம்வீரர்கள் பெரிய அளவில் ஜொலிக்கிறார்கள். சிஎஸ்கே அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடும் பஞ்சாபின் இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி பேட்டிங் யூனிட் பெரிய அளவில் சொதப்பினாலும் கூட இளம் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை கடுமையாக கோபப்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு சீக்கிரம் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.
மைக் ஹசி தெரிவித்த கருத்து
இந்த நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறும் பொழுது ” எங்கள் மூத்த வீரர்களிடம் இன்னும் சிறப்பான பேட்டிங் செய்யும் திறன் இருப்பதாக நம்புகிறோம். வாட்சன், ரகானே போன்றவர்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். நாங்கள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். என்றும் நாங்கள் இந்த வாய்ப்பை இழக்கவில்லை என்று நம்புகிறோம். எனவே தொடர்ந்து அதுவரையில் மூத்த வீரர்கள் விளையாடுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சிஎஸ்கேவின் மோசமான தோல்வி.. ஸ்ரீகாந்த் தந்த யோசனை.. செய்வாரா தோனி?
தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் மூத்த வீரர்களால் பிளே ஆப் சுற்றுக்கு அணியை எடுத்துச் செல்ல முடியாது எனவும், இதன் காரணமாகத்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், ஆனால் மைக் ஹசி இதை புரியாமல் பிடிவாதமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை சமூக வலைதளத்தில் மிகவும் கோபமாக தெரிவித்து வருகிறார்கள்.






