ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியை செய்து வருகின்றனர். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணிக்கு எதிரான தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஆர் சி பி வெற்றி பெற்றிருக்கிறது.
காண்வே வர வேண்டும்:
இரண்டு அணிகளுமே பலமாக இருந்தாலும், சிஎஸ்கே அணியில் சில மைனஸ் பாயிண்டுகள் இருக்கின்றது. அந்த வகையில் சிஎஸ்கே அணியின் நடுவரிசை வீரர்கள் யாரும் பெரிய அளவு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சோபிக்கவில்லை. இதேபோன்று தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் திருப்பாதியும் சரியாக விளையாடவில்லை.
இதனால் ஆர் சி பி எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக நியூசிலாந்து வீரர் கான்வே பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாம் கரண் வேண்டுமா?
சாம் கரண் ஆல் ரவுண்டராக இருந்தாலும் அவர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். மேலும் பேட்டிகளும் ஷாம்கரன் ஒன்பது பந்துகளை எதிர்கொண்டு நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும் ஒரே போட்டியில் ஷாம் கரனின் திறமையை கணிக்க முடியாது என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பது சரியானது தான் இருக்கும்.
இதையும் படிங்க: பும்ரா கிடையாது.. ஐபிஎல்-ல் என் காலம் முழுதும் இந்த பவுலர்தான் பெரிய தலைவலி – அம்பதி ராயுடு பேச்சு
ஒருவேளை கான்வே உள்ளே கொண்டு வர வேண்டும் என்றால் ஷாம் கரணை விட்டு நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இல்லை என்றால் ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிசை தூக்கிவிட்டு அவருக்கு பதில் கான்வே சேர்க்க வேண்டும். இதேபோன்று அன்சில் கம்போஜை மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சேர்க்க வேண்டும். இதனால் நம்பர் மூன்று அல்லது நான்காவது வீரராக ராகுல் திருப்பாதியில் விளையாட வைக்க வேண்டும். இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பலமாக மாற வாய்ப்பு இருக்கிறது






