தன்னுடைய ஐபிஎல் வரலாற்றில் தான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் மிகவும் கடினமாக இருந்தவர் குறித்து சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள அரிய வீரரான அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 2023ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பொழுது அம்பதி ராயுடு அந்த அணியில் இடம் பெற்று ஓய்வு பெற்றார். இது தொடர்ந்து தற்பொழுது அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கு பெற்று வருகிறார்.
ஐபிஎல் தொடரின் அரிய வீரர்
ஐபிஎல் தொடரில் இரு பெரும் அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருந்து வருகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கும் விளையாடிய சில வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு அணிகளுக்காகவும் விளையாடி அதிகபட்சமாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே வீரராக அம்பதி ராயுடு மட்டுமே இருக்கிறார்.
அம்பதி ராயுடு முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட அவர் 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் மொத்தம் ஆறு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற பொழுது இரண்டு அணிகளிலும் அவர் இடம்பெற்ற அரிய வீரராக இருக்கிறார்.
இவர்தான் மிகவும் கடினமான பவுலர்
இந்த நிலையில் அம்பதி ராயுடு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் நைட் ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடுவை அதிகம் கடினப்படுத்திய பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வியை முன் வைத்தார். இதற்கு பதில் அளித்துள்ள அம்பதி ராயுடு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பொழுது மிகவும் பிரச்சினை தந்த மும்பை இந்தியன்ஸ் பவுலர் பும்ராவை தேர்ந்தெடுக்கவில்லை.
இதையும் படிங்க : ரியான் பராக்குக்கு நடந்த சோகம்.. வேதனையான 2 மோசமான சாதனைகள்.. அசாம் ஆரம்பம் வீணானது
இதுகுறித்து கூறியுள்ள அம்பதி ராயுடு “என்னை அதிகம் தொந்தரவு செய்தவர் சுனில் நரைன். அவர் பந்துவீச்சை என்னால் கணிக்கவே முடியவில்லை. நான் சரியான வார்த்தைகளில் இதை கூற வேண்டும் என்றால், நான் பிரஷான கிரிக்கெட் விளையாட விரும்பினேன். அவரை அட்டாக் செய்து ஆட முயற்சி செய்தேன். ஆனால் நான் அவர் பந்தை ஒரு பக்கமாக கணித்தால், அந்த பந்து இன்னொரு பக்கமாக சென்றது. கடைசி வரை எனக்கு அவர் பெரிய தொந்தரவாக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.






