சுனில் நரைனை பார்த்து சாம்பியன் மும்பையே பயப்பட்டது.. அப்ப நாங்க இந்த முடிவை எடுத்தோம் – அம்பதி ராயுடு பேட்டி

0
54
Ambati

ஐபிஎல் தொடரில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த பொழுது சுனில் நரைனை எதிர்கொள்வது பற்றி என்ன மாதிரியான முடிவெடுக்கப்பட்டது என்று அம்பதி ராயுடு தெரிவித்திருக்கிறார்.

நேற்று தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த டெல்லி இடமிருந்து கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்பில் தொடர்ந்து இருக்கிறது.

- Advertisement -

13 ஓவர் 130 ரன்

நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 13 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் அரைசதம் அடித்து அனுபவ வீரரான பாப் டு பிளேசிஸ் மற்றும் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த கேப்டன் அக்சர் படேல் இருந்தார்கள்.

இந்த நிலையில் முக்கியமான நேரத்தில் பந்து வீச வந்த சுனில் நரைன் இவர்கள் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வரும் இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்சையும் வெளியேற்றினார். இங்கிருந்து அந்த அணியால் இறுதியாக 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் வெற்றி பெறக்கூடிய இடத்தில் இருந்து டெல்லி சுனில் நரைன் பந்து வீச்சால் தோல்வியடைந்தது.

- Advertisement -

இதைத்தான் முடிவு செய்தோம்

சுனில் நரைன் பந்துவீச்சு குறித்து பேசி உள்ள அம்பதி ராயுடு கூறும் பொழுது “சில வருடங்கள் நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய பொழுது சுனில் நரைன் பந்துவீச்சை எப்படி சமாளிப்பது என்று அணிக் கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது நாங்கள் ‘இல்லை வேண்டாம் நாம் ஷட்டரை இழுத்து மூடி விடுவோம். அவரை நாம் பார்க்க வேண்டாம். அவரது பந்துவீச்சை நம்மால் எதுவும் செய்ய முடியாது’ என்றுதான் முடிவு எடுத்திருக்கிறோம்”

இதையும் படிங்க : சிறுவன் சூரியவன்சி வசமா மாட்டிக்கிட்டாரு.. இனி பவுலர்கள் இதுல கருணையே காட்ட மாட்டாங்க – ரவி சாஸ்திரி எச்சரிக்கை

“ஐபிஎல் தொடரில் அவர் நீண்ட காலமாக இதை செய்து வருகிறார். மிடில் ஓவர்களில் அவர் இப்படி செய்வது முதல் முறை கிடையாது. மிடில் ஓவர்களில் மற்ற அணிகளின் பேட்டிங் யூனிட்டை விட சில பவுலர்கள் பலமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்தி அவரிடம் இருப்பதால்தான் கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை தக்க வைத்திருக்கிறது. அழுத்தத்தின் கீழ் எப்படி பந்து வீச வேண்டும்? எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -