தற்போது ஐபிஎல் தொடர் வரலாற்றில் லக்னோ அணிக்காக அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டு இருக்கும் ரிஷப் பண்ட் இந்திய டி20 அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்த மாதம் துவங்க இருக்கும் 18ஆவது ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக ரிஷப் பண்ட் இருக்கிறார். மேலும் அவர் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் யாரும் வாங்கப்படாத தொகைக்கு 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார். இருந்த போதிலும் கூட அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் இல்லை. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகவும் துவக்க ஆட்டக்காரர் ஆகவும் இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
ரிஷப் பண்ட் இது உங்க சீசன் ஸார்
இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” இந்திய அணிக்கு மீண்டும் ரிஷப் பண்ட் திரும்புவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்சமாக 27 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் இல்லை. இது மக்களில் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. ஆனால் ஸார் இது உங்களுடைய சீசன், நீங்கள் உள்ளே வந்து நிறைய ரன்கள் எடுத்தால் மக்கள் அதிர்ந்து போவார்கள்”
“அவர் எங்கே பேட்டிங் செய்வார் என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. விக்கெட் கீப்பர்கள் துவக்க வீரர்களாக இருப்பதால் அவர் அங்கு வரலாமா என்றும் பேச்சுவார்த்தை செல்கிறது. என்னை பொறுத்தவரையில் அவர் தனக்காக ஒரு ஒழுங்கான இடத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் அனைத்து நல்ல துவக்கம் கிடைத்தால் மூன்றாவது இடத்தில் வரவேண்டும். இல்லையென்றால் நான்காவது இடத்தில் வரவேண்டும்.
சஞ்சு சாம்சனுடன் போட்டியிடக் கூடாது
“இரண்டு விஷயங்கள் இருக்கிறது, முதலில் நீங்கள் ஒரு கேப்டனாக உங்களுடைய அணியை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். இதனால் கேப்டனாக அதிக அங்கீகாரம் பெறுவீர்கள். இரண்டாவதாக நீங்கள் அதிக ரன்கள் எடுத்தால் இந்திய டி20 அணிக்கு திரும்புவீர்கள். தற்போது விளையாடும் இந்திய டி20 அணி அப்படியே அடுத்த ஆண்டு விளையாடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. டி20 அணி தேர்வுகள் மிகவும் சுறுசுறுப்பாக மாறிக்கொண்டே இருக்கும்”
இதையும் படிங்க : 17 வருட ஐபிஎல் வரலாற்றில்.. அந்த வேலைக்கு இந்த சிஎஸ்கே வீரரை விட மும்பை பிளேயர்தான் பெஸ்ட் – ஜாகிர் கான் தேர்வு
“எனவே இந்த ஐபிஎல் தொடரில் யார் முன்னோக்கி நகர்கிறார்கள் என்பது அவர்கள் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்வதில், வாய்ப்பை பெறுவதில் முக்கிய அங்கம் வகிக்கும். புதிய அணி உடன் ரிஷப் பண்ட்க்கு கேப்டனாகவும் வீரராகவும் பெரிய வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்+ என்று கூறியிருக்கிறார்.